தாதிய டிப்ளேமா பயிற்சி நெறியைப்பூர்த்திசெய்தவர்களிற்கான தாதிய நியமனங்கள் வகுப்பு 3 தரம் 0II ற்கு கடந்த 22 மற்றும் 27.11.2023 ந் திகதிகளில் சுகாதார அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு வடமாகாண சுகாதார திணைக்களத்தில் இடப்பெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. சி. திருவாகரன் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி ஆகியோர் இணைந்து நியமனங்களை வழங்கி வைத்தனர். இந் நிகழ்;வின்போது வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி. பி. எஸ். எம் சாள்ஸ் அவர்களும் நிகழ்நிலையூடாக இணைந்து தாதியளர்களிற்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
22ந் திகதி 51 தாதியர்களிற்கும் 27ந் திகதி 94 தாதியர்களிற்கும் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வெற்றிடங்களிற்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.