‘சவால்களுக்கு மத்தியில் தன்னிறைவான உணவு உற்பத்தியை நோக்கி’ எனும் தொனிப்பொருளிலான வயல்விழா நிகழ்வு மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், வட்டக்கச்சியில் 05.10.2023 அன்று கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சூ.ஜெகதீஸ்வரி தலைமையில் வெகு விமர்சியாக இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம் சமன் பந்துலசேன அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் மரியதாசன் ஜெகூ, மற்றும் மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் பீடாதிபதி,விரிவுரையாளர்கள்,மாவட்ட விவசாயப் பணிப்பாளர்,மேலதிக விவசாய ஆராய்ச்சி பணிப்பாளர், முன்னாள் விவசாய ஆராய்ச்சி பணிப்பாளர், கமநல அபிவருத்தி திணைக்கள உதவி ஆணையாளர்,கிளிநொச்சி மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர், பரந்தன் விவசாய கல்லுர்ரி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், கரைச்சி பிரதேச சபை செயலாளர்,பிரிவுக்குரிய கிராம அலுவலர், கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள், பண்ணை முகாமையாளர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் ஆரோக்கிய வாழ்விற்கான வீட்டுத்தோட்டம், வறட்சி முகாமைத்துவத்தினுடான உப உணவுப்பயிர்ச்செய்கை, சேதனப் பசளை, பீடை நாசினி, உயிர்வாயு உற்பத்தியும் பயன்பாடுகளும், சூழல் நேயத்துடனான தேனி வளர்ப்பு, நெற்செய்கையில் உயர் விளைச்கலிற்கான தொழில் நுட்பங்கள், வினைத்திறனான பயிர்ச்செய்கைக்கு பண்ணை இயந்திரங்களின் பயன்பாடு, காளான் வளர்ப்பும் பெறுமதி சேர் உற்பத்திகளும், காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன முறைகள், உலர் வலயத்தில் கோப்பி, மிளகுச் செய்கை, பயிர்ச்கிகிச்சை முகாம், மண் பரிசோதனையும் அதன் அனுகூலங்களும், தரமான நாற்று உற்பத்தி தொழில் நுட்பங்கள், வெற்றிகரமான சோயாச் செய்கை, அசோலா உற்பத்தியும் பயன்பாடுகளும், மண்புழு உர உற்பத்திகள், வர்த்தக ரீதியான மஞ்சள் செய்கை, செத்தல் மிளகாய் உற்பத்தியில் உலர்த்தியின் பயன்பாடு, இயற்கை முறையில் மரக்கறிகளை சேமித்தல், அடிக்கட்டை பயிர்ச்செய்கை, சிறுதானியங்களும் பெறுமதிசேர் உணவுத் தயாரிப்பும், பழ மரங்களில் தரமான விளைவைப் பெறல், பொதிப்பயிர்ச்செய்கை, களை நெல் பரிபாலனம், உயிர்கரி உற்பத்தியும் பயன்பாடும், பகுதி கருக்கிய உமி உற்பத்தியும் பயன்பாடும் ,வினைத்கிறனான விதைப் பரிகரண முறைகள், சிறந்த விவசாய நடைமுறைகள், பாதுகாப்பு கூடாரங்களில் பயிர்ச்செய்கை, பாரம்பரிய இலைமரக்கறிகளை அறிதல், கால்நடை வளர்ப்பும் ஒருங்கிணைந்த பயிர்ச்செய்கையும் ஆகியவை தொழில்நுட்ப ரீதியாக காட்சிப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்படடதுடன், சில செய்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன.
மேலும் இந் நிகழ்வில் 21 பாடசாலைகளை சேர்ந்த 2358 மாணவர்களும், 486 விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.