கௌரவ வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் வழிநடத்தலின் கீழ் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சை கட்டண பிரிவு மற்றும் மருந்து விற்பனை நிலையத் திறப்பு விழாவானது வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தினால் 28.10.2022ம் அச்சுவேலி செல்வநாயகபுரத்தில் நடாத்தப்பட்டது. மேற்படி நிலையம் பிரதம செயலாளர் – வடக்கு மாகாணம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
,ந் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், செயலாளர் சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் வடமாகாணம், மாகாண ஆணையாளர் மாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் வடமாகாணம், ஆணையாளர் சுதேச வைத்தியத்துறை திணைக்களம் வடமாகாணம், அதிபர் சான்று பெற்ற பாடசாலை அச்சுவேலி, மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பு வைத்திய அதிகாரிகள் சித்த போதனா வைத்தியசாலை கைதடி, உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வு பிரதம செயலாளர் திரு.எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களால் மங்கள விளக்கேற்றலுடன் முற்பகல் 9.00 மணிக்கு சுப முகூர்த்தத்தில் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. ,தனைத் தொடர்ந்து மேற்படி சிகிச்சை பெறுவதற்காக முதலாவது நோயாளி பொருத்தமான நடைமுறைகளின்படி அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ அத்தியட்சகர், மாவட்ட சித்த வைத்தியசாலை, யாழ்ப்பாணம் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து பிரதம செயலாளர் அவர்கள் உரையாற்றுகையில் தற்போதைய காலகட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் மேலைத்தேச வைத்திய சிகிச்சை முறையை விட ஆயுள்வேத வைத்திய சிகிச்சை முறையை நாடி வருவதால் அவர்களுக்கான சேவையை சிறப்பாக செய்வது எமது பொறுப்பாகும் எனத் தெரிவித்ததுடன் எமது பாரம்பரியமாக ,ருக்கும் ,ந்த துறையை கட்டிக் காப்பது எமது கடமையாகும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தால் மேற்படி சிகிச்சை பிரிவின் உருவாக்கம் மற்றும் முன்னேற்றம் பற்றி விளக்கம் காட்சிப்படுத்தப்பட்டதுடன் ,றுதியாக நன்றியுரையுடன் நிகழ்வானது ,னிதே நிறைவுற்றது.