14.02.2022 ஆம் திகதி அன்று யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் அரை நகர்ப்புற வீட்டுத் தோட்டம் பற்றிய கலந்துரையாடல் விவசாயப் பணிப்பாளர் நாயகம் டாக்டர்.எஸ்.எச்.எஸ்.அஜந்த டிசில்வா, தலைமையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கே.எச்.எம்.எஸ் பிரேமலால், முன்னாள் பணிப்பாளர் நாயகம் வளிமண்டலவியல், டாக்டர் பி.வி.ஆர். புண்யவர்தன முன்னாள் விவசாய-காலநிலை நிபுணர், இன்ஜி. என். குமாரசிங்க – முன்னாள் தலைமை பொறியியலாளர், வானிமண்டலவியல், ஆர்.டி. சிறிபால – முன்னாள் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், மற்றும் யாழ் மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அ.ஸ்ரீரங்கன், மாகாண விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதி மாகாண விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
கலந்துரையாடலின் இறுதியில் யாழ் மாவட்டத்தின் நல்லூர், சாவகச்சேரி மற்றும் உடுவில் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டனர். குறித்த திட்டத்தில் அரை நகர்ப்புறங்களில் முன்மாதிரி வீட்டுத் தோட்டங்கi ஸத்hபிப்பதற்;காக ஒவ்வொரு பிரதேசங்களிலும் தலா ஒரு பயனாளிகள் வீதம் தெரிவு செய்யப்பட்டனர். குழுவின் உத்தியோகத்தர்கள் திட்டம் தொடர்பாக விளக்கமளித்து திட்டத்தில் தமது பங்களிப்பு தொடர்பாக தெளிவுபடுத்தினார்கள். கலந்துரையாடிய பயனாளிகள் மேம்படுத்தப்பட்ட வீட்டுத் தோட்ட செய்கையில் ஈடுபடுவதற்கு விருப்பத்தை தெரிவித்துக் கொண்டனர்.