வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளர் பதவியேற்றார்

திரு. எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்கள் வடக்கு மாகாண சபையின் பிரதம செலாளராக 26 ஜூலை 2021 அன்று கைதடி வடக்கு மாகாணசபை கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந் நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர் கொத்தணியின் திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் புதிய பிரதம செயலாளர் அவர்களை பாரம்பரிய முறையில் வரவேற்றனர்.

புதிய பிரதம செயலாளர் அவர்கள் சமய அனுட்டாணங்களை அடியொற்றி மத குருமார்களின் ஆசிர்வாதத்துடன் காலை 11.40 மணியளவில் அமைந்த சுபநேரத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்று ஒப்பமிட்டார். வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், பிரதம செயலாளரின் குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் இந் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

புதிய பிரதம செயலாளர் தனது அறிமுக உரையினை பிரதம செயலாளர் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாகாண செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் பிரதம செயலாளர் கொத்தணியின் கீழ் உள்ள திணைக்களத் தலைவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.