விவசாயத்துறை தொடர்பான இலகு கொடுப்பனவு திட்டம் மற்றும் கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி P.S.M. சார்ள்ஸ் அவர்களுக்கும் அனைத்து பிராந்திய வங்கி முகாமையாளர்களுக்கும் இடையில் விவசாயத்துறை தொடர்பான இலகு கொடுப்பனவு திட்டம் மற்றும் கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று வடமாகாண அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் 20 நவம்பர் 2020 அன்று காலை 11 மணிக்கு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், இனணப்பு செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், வட மாகாண விவசாயத்துறை பணிப்பாளர், அரசாங்க அதிபர்கள், பிராந்திய வங்கி முகாமையாளர்கள் மற்றும் துணை சார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது கௌரவ ஆளுநர் அவர்களால் விவசாய மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் கடன் பெறும் போது வங்கியில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வீணான கால தாமதங்கள் பற்றி கேள்வி எழுப்பினார். முக்கியமாக உத்தரவாத கையெழுத்து அரசாங்க உத்தியோகத்தர் ஒருவரிடம் இருந்து பெறப்பட வேண்டுமா என வினவப்பட்டபோது அவ்வாறான எந்த ஒரு நடைமுறையும் வங்கிகளில் இல்லை எனவும் உரிய விண்ணப்பங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது காலதாமதம் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அனைத்து பிராந்திய முகாமையாளர்களும் தெரிவித்தனர். மேலும் கௌரவ ஆளுநர் அவர்கள் கடன் பெறுவதற்கான வழிமுறைகள், சட்டதிட்டங்கள், தேவைப்பாடுகள் மற்றும் கடன் வழங்குவதற்கு தேவைப்படும் கால எல்லை என்பவற்றை குறிப்பிட்டு எழுத்து மூலமாக அனைத்து வங்கி மாவட்ட முகாமையாளர்கள், அரசாங்க அதிபர்கள் மற்றும் ஆளுநரிற்கும் அறிவிக்குமாறு தெரிவித்தார்.
மேலும் மாவட்டரீதியாக அனைத்து வங்கிகளும் தனித்தனியாக ஒவ்வொரு கிராமத்தை தேர்ந்தெடுத்து அக்கிராமத்தில் உள்ள சுய தொழில் செய்வோரை அடையாளப்படுத்தி அவர்களுக்கான தேவைகளை இனங்கண்டு அவர்களை வழிப்படுத்தி, பொருளாதார ரீதியாக அக்கிராமத்தை முன்னேற்றுமாறும் அறிவுறித்தினார். மேலும் கிராமங்களை தெரிவு செய்யும் போது வங்கி முகானமயாளர்கள் அரசாங்க அதிபர்களுடனும் கிராம விவசாயிகளுடனும் இனணந்து கலந்துரையாடல் ஒன்னை மேற்கொண்டு முடிவுகனை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.