விவசாயக் கண்காட்சி – 2020

மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் வட்டக்கச்சி, கிளிநொச்சியில் 01.10.2020 மற்றும் 02.10.2020 ஆம் திகதிகளில் “தற்சார்பு விவசாய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி” என்னும் தொனிப்பொருளிலான விவசாயக்கண்காட்சி – 2020 காலை 9.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சியின் முதலாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் அபிவிருத்தி மற்றும் நீரியல்துறை அமைச்சர் கௌரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் கௌரவ. திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களும் கலந்து கொண்டு வைபவரீதியாக கண்காட்சியினை ஆரம்பித்துவைத்து இந் நிகழ்வினை சிறப்பிக்கவுள்ளனர்.

இக்கண்காட்சியில் கீழ்வரும் தலைப்புக்களின் கீழான தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

·  விவசாயத் தகவல் மையம் ·  பண்ணை இயந்திரங்களின் பயன்பாடு
·  நகர்புற வீட்டுத்தோட்டச் செய்கை · அறுவடைக்குப் பின்னரான தொழில்நுட்பம்
·  காளான் செய்கை · நாற்று மேடை தொழில்நுட்பம்
·   வர்த்தகரீதியிலான கூட்டெரு உற்பத்தி ·   வர்த்தகரீதியில் உணவுப் பொருட்களின் பெறுமான அதிகரிப்புத் தொழில்நுட்பம்
·  தேனீவளர்ப்பு ·   கொள்கலன் பயிர்ச்செய்கை
·   வலை வீட்டினுள் பாதுகாப்பான விவசாயம் ·     பயிர்ப்பாதுகாப்பு செயன்முறைகள்
·  மறுவயற் பயிர்ச்செய்கை தொழில்நுட்பங்கள் ·   சேதன தோட்டம்
·     சூரியமின்கல சக்தியினூடாக நீர்ப்பம்பிப் பாவனை ·   மூலிகைப்பயிர்கள்
·    அருகிவரும் பாரம்பரிய பயிர்கள் ·   வினைத்திறனான நிலத்தடி நீர் பாவனைக்கான தொழில்நுட்பம்
·    மண்ணின்றிய பயிர்ச்செய்கை ·    மலர்ச் செய்கையில் தொழில்நுட்பங்கள்
·    சுவைச்சரக்கு பயிர்ச்செய்கை (உள்ளி, இஞ்சி,மஞ்சள்) ·   விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் ஆய்வுகூட சேவைகள்
·    அடர்முறையிலான கொய்யாச் செய்கை ·    தானிய சேமிப்புக் களஞ்சியத்தின் செயற்பாடுகள்
·    பணப்பயிராக முருங்கைச் செய்கை ·   பனைசார் உற்பத்திகள் மற்றும் செயற்பாடுகள்
·    மாமரத்தின் கீழ் அன்னாசிப் பயிர்ச்செய்கை ·   பயிர்ச்சிகிச்சை முகாம்
·   அடர்முறையிலான மாமரச்செய்கை ·    விவசாய ஆராய்ச்சிச் செயற்பாடுகள்
·   தென்னையின் கீழ் ஊடுபயிர்ச் செய்கை ·   தென்னைப் பயிர்ச்செய்கை
·    தரமான பழ உற்பத்திக்கான பயிராக்கவியல் தொழில்நுட்பங்கள் ·    விலங்கு வேளாண்மை
·   உள்ளுர் மரக்கறிப் பயிர்ச்செய்கை ·    கால்நடை வளர்ப்பு ஆலோனை, சிகிச்சை மற்றும் மருந்து விற்பனை
·     பழமரச் செய்கையில் வினைத்திறனான நிலப்பயன்பாடு ·   நன்னீர் மீன்வளர்ப்பு செயற்றிட்டம்
·   வீதிப்பயிர்ச்செய்கை முறையில் மரக்கறிப் பயிர்ச்செய்கை ·   மரமுந்திரிகை உற்பத்தி
·   வனவள பாதுகாப்பு செயற்பாடுகள் ·   ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்
·    தரமான கிழங்கு வகைகளின் உற்பத்திக்கான தொழில்நுட்பம்
·   நெற்செய்கை தொழில்நுட்பங்கள்
·    ஏற்றுமதிப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்போம்

விற்பனை

விவசாயம் தொடர்பான பிரசுரங்கள்
பாரம்பரியஉணவுகள்
பழமரக் கன்றுகள் தென்னை, மற்றைய மரக்கன்றுகள் மற்றும் அலங்கார நாற்றுகள்
பெறுமதிசேர்க்கப்பட்ட விவசாய உற்பத்திகள்
மரக்கறி விதைகள், தரமான மரக்கறி நாற்றுக்கள்
விவசாயத்துடன் தொடர்புடைய தனியார் கம்பனிகளின் உற்பத்திகள் (பண்ணை இயந்திரங்கள்,உபகரணங்கள் போன்றன)

விவசாயிகள், பொதுமக்கள், கமக்காரர் அமைப்புக்களின் உறுப்பினர்கள், மகளிர் கமக்காரர் அமைப்புக்களின் உறுப்பினர்கள், இளம் விவசாயிகள் கழகங்களின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள், ஏனைய சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், உயர் கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள், அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் இக் கண்காட்சியில் பங்குபற்றி பயன் பெற அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.