விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கான களவிஜயம்

விவசாய நவீனமயமாக்கல் திட்ட முன்னேற்றம் தொடர்பான களவிஜயமானது மாகாண விவசாயப்பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், விவசாய நவீனமயமாக்கல் திட்ட முகாமைத்துவ அலகின் பிரதி திட்டப்பணிப்பாளர் திரு. தம்மிக்க குணவர்த்தன, விவசாய விஞ்ஞானி திரு. சுனில் கோவின்ன, நிகழ்ச்சித்திட்ட அலுவலர் சந்தன மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரால் 24.07.2020 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் மத்தியவிவசாய அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் முத்துஐயன்கட்டு, முத்துவிநாயகபுரம், தண்டுவான், ஒட்டுசுட்டான், தட்டயமலை, பண்டாரவன்னி ஆகிய கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு 200 பயனாளிகளிற்கு ½ ஏக்கருக்கான 20மப விதை நிலக்கடலையும் 40 Kg ஜிப்சமும் தூவல் நீர்ப்பாசனத்தொகுதியும் மின்சார நீரிறைக்கும் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது. மேற்கூறப்பட்ட 6 கிராமங்களிலும் நிலக்கடலை உற்பத்தியாளர் சங்கங்கள் அமைக்கப்பட்டு அவற்றிற்கு நிலக்கடலை செய்கைக்கான விதையிடும் கருவி, ஊடு களைகட்டும் கருவி, நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரம் என்பன வழங்கப்பட்டன. முத்துவிநாயகபுரம் நிலக்கடலை உற்பத்தியாளர் சங்கமானது நிலக்கடலைச் செய்கையாளர்களிற்கு சிறந்த சேவையை வழங்கி வருகின்றது. நடமாடும் சேவையினூடாக நிலக்கடலை பிரித்தெடுக்கும் இயந்திரத்தினைக் கொண்டு சென்று விவசாயிகளின் களங்களிலேயே சேவையை வழங்குகின்றனர். இதற்காக ஒரு மணித்தியாலத்திற்கு 3500 /= ரூபா வாடகையாகப் பெற்றுக்கொள்கின்றனர். இச் சேவையைப் பெற்றுக்கொள்ள விரும்பும் விவசாயிகள் முத்துவிநாயகபுரம் நிலக்கடலை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் திரு. சோமசுந்தரம் சிறீதரனுடன் (0777450956) தொடர்பு கொண்டு சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.