உவர் நிலத்தில் நெற்செய்கை மற்றும் நெல் அறுவடையின் பின்னரான மறுவயற்பயிர்ச்செய்கை மற்றும் மரக்கறிச்செய்கை தொடர்பான களவிஜயம்

ஆளுநர், வடமாகாணம் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக, 24.07.2020 ஆம் திகதி சீனா நாட்டு சர்வதேச புகையிரத கூட்டுறவு நிறுவனத்தின் (Railway International Group CO, Ltd) இலங்கைக்கான பிரதிநிதிகளான எந்திரி வெபர் சியா மற்றும் திரு.ஹாயோ பெங் ஆகியோருடன் யாழ் மாவட்டத்திற்கான பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அ.சிறிரங்கன், உதவி விவசாய பணிப்பாளர் திருமதி.வி.நடனமலர் மற்றும் பாடவிதான உத்தியோகத்தர் திரு.ச.பாலகிருஸ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவானது நவாலி தெற்கு, அராலி, வட்டுக்கோட்டை சங்கானை, சங்குவேலி வயல்வெளிகளில் பயிர்செய்கை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக களவிஐயத்தை மேற்கொண்டிருந்தனர்.

உவர் தன்மை காரணமாக நெற்செய்கை மேற்கொள்ளப்படாத காக்கைதீவு வயல்வெளி, நவாலி தெற்கு, அராலி வயல் நிலங்கள் பார்வையிடப்பட்டன.

வட்டு தென்மேற்கு வயல்வெளியில் செய்கை பண்ணப்பட்டிருந்த பூசணி, நிலக்கடலை, சின்னவெங்காயம் மற்றும் சிறுதானிய பயிர்செய்கைகள் பார்வையிடப்பட்டதுடன் விவசாயக் கிணறுகளும் பார்வையிடப்பட்டன. விவசாயிகளுடன் மண்ணின் உவர்தன்மை, பயிர்செய்கைக் கால அட்டவணை, பயிர்ச்செறிவு, நீர் கிடைக்கும் தன்மை மற்றும் உற்பத்தித்தரம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

சீன நாட்டுப் பிரதிநிதிகள் உவர்நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்வதற்கு பொருத்தமான நெல்லினங்கள், மண்ணின் உவர்தன்மையை மீட்டெடுப்பதற்கான தொழில்நுட்பங்கள் என்பவற்றை தமது ஆராய்ச்சி உத்தியோகத்தர்களின் உதவியுடன் இங்கு நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும் சங்குவேலி பகுதியில் செய்கை பண்ணப்படும் மிளகாய் செய்கை பார்வையிடப்பட்டது. மிளகாய் கெய்கையை மேம்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இவ்விடயங்கள் தொடர்பாக சீன நாட்டு அரசாங்கத்துடன் கலந்துரையாடப்:பட்டு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டன.