இன்றைய காலகட்டத்தில் பலவிதமான நோய்களினால் எமது சமூகம் பாதிப்படைந்து வரும் சூழ்நிலையில் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் ஆனது பெரிதும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றமை கண்கூடாக நாம் அறிந்ததே!
Pink October மாதத்தினை முன்னிட்டு மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சையை விரைவாக ஆரம்பத்திலேயே மேற்கொண்டால் எந்த அளவிற்கு சிறப்பான விளைவுகளைப் பெறமுடியும் என்பவை தொடர்பான பயன்மிகுந்த விழிப்புணர்வு நிகழ்வானது பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை, கிளிநொச்சியில் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் உதவிச்செயலாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் வடமாகாணத்தில் உள்ள 75 பெண் உத்தியோகத்தர்களுக்கு (கர்ப்பிணிப் பெண்கள்/ பாலூட்டும் தாய்மார்கள் உட்பட) 29.10.2024 அன்று னுச. திருமதி.யோசபீன் திருமகள் சிவசங்கர் அவர்களை வளவாளராகக் கொண்டு காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி – கிளிநொச்சி , மருத்துவத்துறை சார் உத்தியோகத்தர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் வடமாகாணத்திலுள்ள அலுவலகங்களில் கடமையாற்றும் பெண் உத்தியோகத்தர்கள் ணுழழஅ செயலி ஊடாக பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.