சுகாதார அமைச்சு

வேணாவில் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டம்  வேணாவில் கிராமிய சுகாதார நிலையம் ஜனாதிபதியின் “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” வேலைத்திட்டத்தின் ஊடாக 07.06.2019 திகதி திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி உமாசங்கர், புதுகுடியிருப்பு பிரதேசசெயலர் ம.பிரதீபன், புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கெங்காதீஸ்வரன், வைத்திய கலாநிதி சு.சத்தியரூபன், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

வேணாவில் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது Read More »

வடக்கு மாகாண சுகாதார சேவையின் பரிசாரகர தரம்-III க்கான பதவியுயர்வு மீதான நியமனக் கடிதங்கள் கையளித்தல் நிகழ்வு

வடமாகாண சுகாதார அமைச்சினால் சுகாதார சேவை பரிசாரகர் தரம் – iii க்கான பதவியுயர்வுக்கான நியமன கடிதங்கள் 22.05.2019 அன்று சுகாதார திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன. சுகாதார அமைச்சின் செயலாளர் திரு.சி.திருவாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் 99 பணியாளர்கள் தமக்கான பதவியுயர்வு மீதான நியமன கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். அத்தோடு வளவாளர்களாக பயிற்சி வழங்கிய அலுவலர்களும் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி. சுரேன் ராகவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நியமன

வடக்கு மாகாண சுகாதார சேவையின் பரிசாரகர தரம்-III க்கான பதவியுயர்வு மீதான நியமனக் கடிதங்கள் கையளித்தல் நிகழ்வு Read More »

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடொன்றிற்கான “சித்திரை புதுவருட உறுதியுரை”

அதிமேதகு சனாதிபதி அவர்களின் நிலைபேறான அபிவிருத்தி எண்ணக்கருவின் கீழ் அவரது நேரடி கண்காணிப்பு மற்றும் நெறிப்படுத்தலுடன் செயற்படுத்தப்படுகின்ற “போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு” போதைப்பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கமைவாக கடந்த 03.04.2019ஆம் திகதி காலை 8.30 மணிக்கு வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் ‘சித்திரை புதுவருட உறுதியுரை’ எடுக்கப்பட்டதுடன் போதை விடுதலை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றும் நடாத்தப்பட்டது.

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடொன்றிற்கான “சித்திரை புதுவருட உறுதியுரை” Read More »

உலக ஓட்டிசம் விழிப்புணர்வு தினம் 2019

உலக ஓட்டிசம் தினத்தை முன்னிட்டு வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களமும் யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலகத்தின் விசேட கல்விப் பிரிவும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்வு யா/ கோப்பாய் மகாவித்தியாலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி முகாமைத்துவம்) அவர்களின் தலைமையில் கடந்த 04.04.2019 வியாழக்கிழமை நடாத்தப்பட்டது.  இந் நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் ஓட்டிசம் தொடர்பான விழிப்புணர்வும் அது தொடர்பான யோகா செய்முறை விளக்கங்களும் வழங்கப்ட்டதுடன் விசேட தேவையுடைய மாணவர்களினால் கலை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டன. இந் நிகழ்வில் பிரதம

உலக ஓட்டிசம் விழிப்புணர்வு தினம் 2019 Read More »

மருத்துவ கண்காட்சி – 11 – 2019

வடமாகாண சுகாதார அமைச்சும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடமும் இணைந்து நடாத்திய மருத்துவக் கண்காட்சி-11 2019 இன் அங்குரார்ப்பண வைபவமானது யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் கிளிநொச்சி வளாகத்தில் 2019 ஏப்ரல் 02 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். யாழ் பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் கு.மிகுந்தன், வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரச

மருத்துவ கண்காட்சி – 11 – 2019 Read More »

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைப்பு

கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் முதன் முதலாகக் கண் சத்திரசிகிச்சை விடுதி 22 மார்ச் 2019 அன்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகம் அவர்களால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இதுவரைகாலமும் நோயாளர்கள் கண் சத்திர சிகிச்சைகளுக்காக கொழும்பு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்குச் சென்று வைத்திய சிகிச்சைகளைப் பெற்று வந்தனர். இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.காண்டீபன் அவர்கள் சுகாதார அமைச்சிற்கு கோரிக்கை விடுத்ததன் பலனாக விசேட கண்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்சத்திர சிகிச்சை விடுதி திறந்து வைப்பு Read More »

வெப்பத்தாக்கம் காரணமாக ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்தல்

”வெப்பத்தாக்கம் காரணமாக ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்தல்”  தொடர்பான அறிவுறுத்தல் ஒன்றை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடமாகாணம் அவர்கள் வழங்கியுள்ளார்.  

வெப்பத்தாக்கம் காரணமாக ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்தல் Read More »