வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாமினை நடாத்தியது.
வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பலநோக்கு மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 12.12.2021 காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது. இந்நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர், சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், பிரதி மாகாண ஆணையாளர், வலிமேற்கு பிரதேச சபை தலைவர், சங்கானை பிரதேசசெயலக மேலதிக பிரதேச செயலர் […]