சுகாதார அமைச்சு

மருத்துவமுகாம் சுதந்திரபுரம் – உடையார்கட்டு

விவசாய திணைக்களத்தினால் கடந்த 06.10.2022 அன்று சுதந்திரபுரம் – உடையார்கட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையில் விசுவமடு சித்த மத்திய மருந்தகமானது மருத்துவ முகாம் ஒன்றினை நடாத்தியது. முல்லைத்தீவு மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலர்களினால் நடாத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் ஏறத்தாழ 100 விவசாயிகள் பயன்பெற்றனர்.

மருத்துவமுகாம் சுதந்திரபுரம் – உடையார்கட்டு Read More »

மருத்துவர்களிற்கான ‘அக்கினிகர்ம’ பயிற்சி

சித்த வைத்தியசாலைகளில் சித்த விசேட சிகிச்சையினை மேம்படுத்தும் முகமாக வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் மருத்துவர்களிற்கு ‘அக்கினிகர்ம’ பயிற்சியானது கடந்த 03.10.2022 ம் திகதி கீரிமலை சித்த மத்திய மருந்தகத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் 14 மருத்துவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.  

மருத்துவர்களிற்கான ‘அக்கினிகர்ம’ பயிற்சி Read More »

சுதேச மருந்துகளின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை நிலையம் – நல்லூர் உற்சவம் – 2022

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலிற்கமைய 2022 ம் ஆண்டின் நல்லூர் உற்சவத்தில் வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மருந்து உற்பத்தி பிரிவால் தயாரிக்கப்பட்ட சுதேச மருந்துகளை காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை நிலையமானது 17/08/2022 புதன்கிழமை அன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டு திருவிழா முடியும் காலப்பகுதி வரை விற்பனை நடைபெற்றது. இவ் விற்பனை நிலையத்தில் சுதேச மருந்துகள், ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மருத்துவ ஆலோசனைகளும் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஒழுங்கு

சுதேச மருந்துகளின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனை நிலையம் – நல்லூர் உற்சவம் – 2022 Read More »

நடமாடும் வைத்திய சேவை – அச்சுவேலி

மாவட்ட சித்த வைத்தியசாலை – யாழ்ப்பாணத்தினால் நடமாடும் வைத்திய சேவையானது அச்சுவேலி சான்று பெற்ற பாடசாலையில் 18 ம் திகதி யூலை 2022 ஆரம்பிக்கப்பட்டது. மாவட்ட சித்த வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களினால் நடாத்தப்பட்ட இவ் நடமாடும் வைத்திய சேவையில் யூலை மாத இறுதி வரை 128 நோயளர்கள் வருகை தந்து பயனடைந்தனர். நடமாடும் வைத்திய சேவையானது யூலை மாத இறுதி வரையும் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடாத்தப்பட்டு வந்து தற்போது ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றது.

நடமாடும் வைத்திய சேவை – அச்சுவேலி Read More »

இலவச சித்த மருத்துவ முகாம் மன்னாரில் இடம்பெற்றது

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முருங்கன் டொன் பொஸ்கோ ரெக் மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 20.03.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை நடாத்தியது. இந்நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர், வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், டொன் பொஸ்கோ இயக்குனர், சமூக மருத்துவ உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு

இலவச சித்த மருத்துவ முகாம் மன்னாரில் இடம்பெற்றது Read More »

சர்வதேச மகளிர்தினம் – 2022 – வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம்

2022 ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர்தினமானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் 08/03/2022 செவ்வாய்கிழமை அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு விசுவமடு மத்திய சனசமூக நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் மகளிரின் பல்வேறு படிநிலைகளுக்குரிய ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் சமூக மருத்துவ உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்டன. அத்துடன் பாரம்பரிய வைத்தியர்கள் கௌரவிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு மூலிகைக் கன்றுகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சின்

சர்வதேச மகளிர்தினம் – 2022 – வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் Read More »

கீரிமலை கிராமிய சித்த மருத்துவமனை சத்துணவுக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்

‘வரவுசெலவுத் திட்டத்தில் ஒரு லட்சம் வேலை’ எனும் திட்டத்தின், கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைவாகக் கீரிமலை கிராமிய சித்த மருத்துவமனை வளாகத்தில் சத்துணவுக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல் கடந்த 03.02.2022 சுப நேரத்தில் நடைபெற்றது. ரூபா 0.25 மில்லியன் ஆரம்ப நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் மாதாந்தம் 1000 பயனாளிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் அவர்களால் அடிக்கல்  நாட்டப்பட்டது. இந்நிகழ்வில், சுதேச மருத்தவத் திணைக்களத்தின் ஆணையாளர்,  மருத்துவமனையின் மருத்துவப் பொறுப்பதிகாரி,

கீரிமலை கிராமிய சித்த மருத்துவமனை சத்துணவுக்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல் Read More »

கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மற்றும் “பரிகாரி” சஞ்சிகை வெளியீடும், மாவட்ட சித்த வைத்தியசாலை, கிளிநொச்சி

மாவட்ட சித்த வைத்தியசாலை, கிளிநொச்சியில்; கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையமானது கொவிட் 19 கடந்த 29.12.2021ம் திகதி அன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. இந் நிலையமானது கொவிட் 19 ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில், உதவிப் பிரதம செயலாளர், வடக்கு மாகாணம், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சின் செயவாளர், கிளிநொச்சி மாவட்ட செயலர், சித்த வைத்திய மாகாண ஆணையாளர்இ சித்த வைத்திய பிரதி மாகாண ஆணையாளர்இ கிளிநொச்சி பிராந்திய சேவைகள்

கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மற்றும் “பரிகாரி” சஞ்சிகை வெளியீடும், மாவட்ட சித்த வைத்தியசாலை, கிளிநொச்சி Read More »

கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மாவட்ட சித்த வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு

மாவட்ட சித்த வைத்தியசாலை, புதுக்குடியிருப்பில் கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையமானது கடந்த 29.12.2021ம் திகதி அன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. இந் நிலையம் கொவிட் 19 ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில், சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு அமைச்சின் செயலாளர், சித்த வைத்திய மாகாண ஆணையாளர்இ சித்த வைத்திய பிரதி மாகாண ஆணையாளர்,  முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு உதவிப் பிரதேச செயலர் மற்றும் புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ

கொவிட் 19 தொற்றின் பின்னரான பராமரிப்பு நிலையம் திறப்பு விழா மாவட்ட சித்த வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு Read More »

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாமினை நடாத்தியது.

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 19.12.2021 காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபர், இந்தியத்துணைத்தூதுவர், வடக்குமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், பிரதி ஆணையாளர், கரைச்சி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்ட ஆயர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், பாரதிபுரம் மகாவித்தியாலய அதிபர்,

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் இந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாமினை நடாத்தியது. Read More »