சுகாதார அமைச்சு

சித்த மருந்து விற்பனை நிலையம் திறப்பு – கிளிநொச்சி

சித்த மருந்துகள் கிளிநொச்சி மாவட்ட மக்களிற்கும் தனியார் வைத்தியர்களிற்கும் கிடைக்கக்கூடிய விதத்தில் சேவையை விஸ்தரிக்கும் வகையில் சித்த மருந்து விற்பனை நிலையமானது கடந்த 04/01/2023 அன்று கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிலையமானது கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர், கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சித்த […]

சித்த மருந்து விற்பனை நிலையம் திறப்பு – கிளிநொச்சி Read More »

நடமாடும் மருத்துவ சேவை – கரியாலை நாகபடுவான்

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் நடமாடும் மருத்துவ சேவையானது கடந்த 07.12.2022 அன்று 19ம் கட்டை, கரியாலை நாகபடுவான், கிளிநொச்சியில் ஆரம்பிக்கபட்டது. கரியாலை நாகபடுவான் அறம் செய் அறக்கட்டளை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்நடமாடும் சேவையானது இவ்விடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது. இந் நடமாடும் மருத்துவ சேவையின் மூலம் ஏறத்தாழ 85 நோயாளர்கள் மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனையைப் பெற்று நன்மை அடைந்ததுடன் பூநகரி பிரதேச செயலக சமூக மருத்துவ உத்தியோகத்தர், பிரதேசசபை உறுப்பினர்கள், அறம் செய் அறக்கட்டளை

நடமாடும் மருத்துவ சேவை – கரியாலை நாகபடுவான் Read More »

மூலிகை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் – மன்னார்

மூலிகை தோட்டம் மற்றும் மூலிகை சார் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடந்த 04/12/2022ம் திகதி மன்னார் மாவட்ட சித்த வைத்தியசாலையில் மூலிகை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் ஏறத்தாழ 150 மூலிகைக் கன்றுகள் மன்னார் மாவட்ட சித்த வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டு, வைத்தியசாலை வளாகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையான கன்றுகள் நாட்டப்பட்டதுடன் ஏனைய கன்றுகள் மன்னார் மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளுக்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து மூலிகை

மூலிகை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் – மன்னார் Read More »

உள்ளூராட்சி திணைக்கள மருந்துக்கலவையாளர்களிற்கான பயிற்சி – யாழ் மாவட்டம்

யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இலவச சித்த வைத்தியசாலைகளில் கடமைபுரியும் ஒரு தொகுதி மருந்துக்கலவையாளருக்குகான பயிற்சி நெறியானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் உள்ளூராட்சித்திணைக்களத்துடன் இணைந்து நடாத்தப்பட்டது. இப்பயிற்சி நெறியானது மருந்துக்கலவையாளர்களின் ஆளுமையை விருத்தி செய்யும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் ஆலோசனையின் பேரில் நடாத்தப்பட்டது. 28/11/2022 ஆரம்பித்த இப்பயிற்சி நெறியானது 6/12/2022 வரை 7 நாட்கள் கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியின் தொடக்க நிகழ்வில்;

உள்ளூராட்சி திணைக்கள மருந்துக்கலவையாளர்களிற்கான பயிற்சி – யாழ் மாவட்டம் Read More »

சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையம் திறப்பு விழா

  வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தால் சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையமானது கடந்த 28.10.2022 அன்று அச்சுவேலியில் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையமானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. ளு.ஆ. சமன் பந்துலசேன அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்குமாகாண பிரதம செயலாளர்;;; வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ

சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையம் திறப்பு விழா Read More »

நடமாடும் மருத்துவ சேவை கண்டாவளை கிராம அலுவலர் பிரிவு

கல்மடுநகர் கிராமிய சித்த மருத்துவமனை மற்றும் மூலிகைத்தோட்டத்தினால் நடமாடும் மருத்துவசேவையின் தொடர் நிகழ்வுகள் கடந்த 11.10.2022 மற்றும் 25.10.2022 ஆகிய தினங்களில் கண்டாவளை கிராம அலுவலர் அலுவலகத்தில் நடாத்தப்பட்டது. இதில் எறத்தாழ 25 – 30 முதியோர் தமக்குரிய மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வகளைப் பெற்று பயனடைந்தார்கள்.    

நடமாடும் மருத்துவ சேவை கண்டாவளை கிராம அலுவலர் பிரிவு Read More »

ஆயுர்வேத விழிப்புணர்வுக் கண்காட்சி

இந்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய ஆயுர்வேத நாளை முன்னிட்டு வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம், இந்திய துணைத்தூதரகம் மற்றும் சித்த போதனா வைத்தியசாலை – கைதடி ஆகியவை இணைந்து சுதேச மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வுக் கண்காட்சி ஒன்றானது கடந்த 21.10.2022 மற்றும் 22.10.2022 ஆகிய தினங்களில் கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது. இக்கண்காட்சியில் மருந்து உற்பத்தி பிரிவினால் உற்பத்தி செய்யப்பட்ட மருந்து மற்றும் மூலிகைகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டதுடன் பராம்பரிய சத்துணவுகள் தொடர்பான செய்முறை விளக்கங்களும்

ஆயுர்வேத விழிப்புணர்வுக் கண்காட்சி Read More »

பாரம்பரிய உணவுத் தயாரிப்பு தொடர்பான மகளிருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

  பாரம்பரிய உணவுத் தயாரிப்பு தொடர்பான 3 நாள் தொடர் விழிப்புணர்வுக் கருத்தரங்கானது கல்மடுநகர் கிராமிய சித்த மருத்துவமனை மற்றும் மூலிகைத்தோட்டத்தில் கடந்த 19.10.2022 தொடக்கம் 21.10.2022 வரை நடைபெற்றது. கல்மடுநகர் கிராமிய சித்த மருத்துவமனை மற்றும் மூலிகைத்தோட்டம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் ஆகியவை இணைந்து நடாத்திய இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் இலைக்கஞ்சி, சிறுதானியக்கஞ்சி, சுக்குமல்லிகோப்பி, துருஞ்சிமணப்பாகு, தூதுவளை அடை, நன்னாரிப்பானம், செவ்வரத்தம்பூ பானம், கறுவாத்தேநீர் மற்றும் கற்றாளைப்பானம் ஆகியவற்றின் தயாரிப்பு முறைகள் பற்றிய செயன்முறை

பாரம்பரிய உணவுத் தயாரிப்பு தொடர்பான மகளிருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு Read More »

சிறுதானியப் பயிர்ச்செய்கைக்கேற்ற வகையில் காடு துப்பரவும் நிலப்பண்படுத்தலும் மூலிகைத் தோட்டம் – கல்மடுநகர்

கல்மடுநகர் மூலிகைத் தோட்டத்தில் இதுவரை பயன்படுத்தப்படாது இருந்த காட்டுப்பகதியில் ஏறத்தாழ 3.5 ஏக்கர் அளவுடைய பகுதி சிறுதானியப் பயிர்ச்செய்கைக்காக கடந்த 04.10.2022 அன்று டியஉமாழந இன் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. இதன் அடுத்த கட்டமாக கடந்த27.10.2022 அன்று உழவு இயந்திரத்தினால் முன்னர் துப்பரவு செய்யப்பட்ட காட்டுப்பகுதி உழுது பண்படுத்தப்பட்டது.

சிறுதானியப் பயிர்ச்செய்கைக்கேற்ற வகையில் காடு துப்பரவும் நிலப்பண்படுத்தலும் மூலிகைத் தோட்டம் – கல்மடுநகர் Read More »

தியானப்பயிற்சி அறிவுப்பகிர்வு நிகழ்வு – சுதேச மருத்துவத் திணைக்களம், வடக்கு மாகாணம்

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தொடர் அறிவுப் பகிர்வு நிகழ்வின் முதற்கட்டமாக தியானப்பயிற்சியானது கடந்த 11.10.2022 ம் திகதி திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியானது யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவின் சமூக மருத்துவர் அவர்களினால் செய்முறை விளக்கங்களுடன் ஏறத்தாழ 30 உத்தியோகத்தர்களின் முனைப்பான பங்களிப்புடன் நடாத்தப்பட்டது.

தியானப்பயிற்சி அறிவுப்பகிர்வு நிகழ்வு – சுதேச மருத்துவத் திணைக்களம், வடக்கு மாகாணம் Read More »