சுகாதார அமைச்சு

மூலிகைக் கன்றுகள் கையளிப்பு மாவட்ட சித்த வைத்தியசாலை – கிளிநொச்சி

Alliance Finance Co-PLC நிறுவனத்தினால் கடந்த 21.02.2023 அன்று 53 மூலிகைக் கன்றுகள் கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலைக்கு கையளிப்பு செய்யப்பட்டு வைத்தியசாலை வளாகத்தில்; நடப்பட்டது. இந் நிகழ்வில் Alliance Finance CO.PLC இன் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர், மருத்துவ உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் பங்குபற்றினார்கள்.      

மூலிகைக் கன்றுகள் கையளிப்பு மாவட்ட சித்த வைத்தியசாலை – கிளிநொச்சி Read More »

விருது வழங்கும் நிகழ்வு

2020ம் ஆண்டிற்கான தேசிய உற்பத்திதிறன் விருதானது மாவட்ட சித்த வைத்தியசாலை – முல்லைத்தீவிற்கு கிடைப்பதற்கு பங்களிப்புச் செய்த வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான பாராட்டு சான்றிதழ்களும் COVID – 19 பெருந்தொற்றுக் காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான பாராட்டு சான்றிதழ்களும் கடந்த 03.01.2023 அன்று முல்லைத்தீவு மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் நடாத்தப்பட்ட வருட நிறைவு விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்து. இந்நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர், முன்னாள் பிரதி மாகாண ஆணையாளர் மற்றும்

விருது வழங்கும் நிகழ்வு Read More »

சித்தர் தினம் அனுஸ்டிப்பு

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் கடந்த 09/01/2023 அன்று சித்தர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. சித்த மருத்துவத்தின் தந்தையாக கருதப்பபடும் அகஸ்தியர் பிறந்ததினமான ஆயிலிய நட்சத்திரத்தன்று சித்தர் தினமாக கொண்டாடப்பட்டுவருகின்றது. அதன் அடிப்படையில் இவ்வருடம் மாவட்ட சித்த வைத்தியசாலை – யாழ்ப்பாணம், மாவட்ட சித்த வைத்தியசாலை – முல்லைத்தீவு, மருந்து உற்பத்திப்பிரிவு – அச்சுவேலி மற்றும் கிராமிய சித்த வைத்தியசாலையும் அரச மூலிகைத் தோட்டமும் – கல்மடுநகர் ஆகிய நிறுவனங்களில் சித்தர் தினமானது

சித்தர் தினம் அனுஸ்டிப்பு Read More »

நடமாடும் மருத்துவ சேவை – குருநகர்

தெல்லிப்பளை கிராமிய சித்த வைத்தியசாலையினால் நடமாடும் மருத்துவ சேவையானது குருநகர் தொடர்மாடி சனசமூக நிலையத்தில்; கடந்த 04/01/2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இந் நடமாடும் மருத்துவ சேவையானது யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் வாரந்தோறும் நடைபெறத் திட்டமிப்பட்டுள்ளது. இச்சேவை வழங்குவதற்குரிய கட்டட வசதியானது குருநகர் ஐக்கிய முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது. இவ் ஆரம்ப நிகழ்வில் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர், யாழ் மாவட்ட ஆயுர்வேத ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், மருத்துவ உத்தியோகத்தர்கள், அருட்ச்சகோதர்களான அருளானந்தம் ஜவின் மற்றும்

நடமாடும் மருத்துவ சேவை – குருநகர் Read More »

சித்த மருந்து விற்பனை நிலையம் திறப்பு – கிளிநொச்சி

சித்த மருந்துகள் கிளிநொச்சி மாவட்ட மக்களிற்கும் தனியார் வைத்தியர்களிற்கும் கிடைக்கக்கூடிய விதத்தில் சேவையை விஸ்தரிக்கும் வகையில் சித்த மருந்து விற்பனை நிலையமானது கடந்த 04/01/2023 அன்று கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிலையமானது கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலாளர், கிளிநொச்சி மாவட்ட சித்த வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர், யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சித்த

சித்த மருந்து விற்பனை நிலையம் திறப்பு – கிளிநொச்சி Read More »

நடமாடும் மருத்துவ சேவை – கரியாலை நாகபடுவான்

வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் நடமாடும் மருத்துவ சேவையானது கடந்த 07.12.2022 அன்று 19ம் கட்டை, கரியாலை நாகபடுவான், கிளிநொச்சியில் ஆரம்பிக்கபட்டது. கரியாலை நாகபடுவான் அறம் செய் அறக்கட்டளை நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்நடமாடும் சேவையானது இவ்விடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது. இந் நடமாடும் மருத்துவ சேவையின் மூலம் ஏறத்தாழ 85 நோயாளர்கள் மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனையைப் பெற்று நன்மை அடைந்ததுடன் பூநகரி பிரதேச செயலக சமூக மருத்துவ உத்தியோகத்தர், பிரதேசசபை உறுப்பினர்கள், அறம் செய் அறக்கட்டளை

நடமாடும் மருத்துவ சேவை – கரியாலை நாகபடுவான் Read More »

மூலிகை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் – மன்னார்

மூலிகை தோட்டம் மற்றும் மூலிகை சார் செயற்பாடுகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கடந்த 04/12/2022ம் திகதி மன்னார் மாவட்ட சித்த வைத்தியசாலையில் மூலிகை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் ஏறத்தாழ 150 மூலிகைக் கன்றுகள் மன்னார் மாவட்ட சித்த வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டு, வைத்தியசாலை வளாகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையான கன்றுகள் நாட்டப்பட்டதுடன் ஏனைய கன்றுகள் மன்னார் மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளுக்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து மூலிகை

மூலிகை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் – மன்னார் Read More »

உள்ளூராட்சி திணைக்கள மருந்துக்கலவையாளர்களிற்கான பயிற்சி – யாழ் மாவட்டம்

யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் இலவச சித்த வைத்தியசாலைகளில் கடமைபுரியும் ஒரு தொகுதி மருந்துக்கலவையாளருக்குகான பயிற்சி நெறியானது வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தினால் உள்ளூராட்சித்திணைக்களத்துடன் இணைந்து நடாத்தப்பட்டது. இப்பயிற்சி நெறியானது மருந்துக்கலவையாளர்களின் ஆளுமையை விருத்தி செய்யும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் ஆலோசனையின் பேரில் நடாத்தப்பட்டது. 28/11/2022 ஆரம்பித்த இப்பயிற்சி நெறியானது 6/12/2022 வரை 7 நாட்கள் கொடிகாமம் கிராமிய சித்த வைத்தியசாலையில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியின் தொடக்க நிகழ்வில்;

உள்ளூராட்சி திணைக்கள மருந்துக்கலவையாளர்களிற்கான பயிற்சி – யாழ் மாவட்டம் Read More »

சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையம் திறப்பு விழா

  வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தால் சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையமானது கடந்த 28.10.2022 அன்று அச்சுவேலியில் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் உருவாக்கப்பட்ட சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையமானது வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு. ளு.ஆ. சமன் பந்துலசேன அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்குமாகாண பிரதம செயலாளர்;;; வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ

சித்த விசேட சிகிச்சைப்பிரிவு மற்றும் மருந்துகள் விற்பனை நிலையம் திறப்பு விழா Read More »

நடமாடும் மருத்துவ சேவை கண்டாவளை கிராம அலுவலர் பிரிவு

கல்மடுநகர் கிராமிய சித்த மருத்துவமனை மற்றும் மூலிகைத்தோட்டத்தினால் நடமாடும் மருத்துவசேவையின் தொடர் நிகழ்வுகள் கடந்த 11.10.2022 மற்றும் 25.10.2022 ஆகிய தினங்களில் கண்டாவளை கிராம அலுவலர் அலுவலகத்தில் நடாத்தப்பட்டது. இதில் எறத்தாழ 25 – 30 முதியோர் தமக்குரிய மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வகளைப் பெற்று பயனடைந்தார்கள்.    

நடமாடும் மருத்துவ சேவை கண்டாவளை கிராம அலுவலர் பிரிவு Read More »