சுகாதார அமைச்சு அலுவலர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஒரு நாள் பயிற்சிநெறி இடம்பெற்றது.
வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுதேச மருத்துவத்திணைக்கள உத்தியோகத்தர்களிற்கு நவீன தகவல் தொழில்நுட்ப நடைமுறைகள் மூலம் அலுவலக பணிகளை எளிதாக்குதல் எனும் ஒருநாள் பயிற்சி நெறி 05 டிசெம்பர் 2025 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொழில் வழிகாட்டுதல் பிரிவினால் நடாத்தப்பட்டது. இதன் போது யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கணணிதுறை சார்ந்த பேராசிரியர் எம்.சியாமளன், விரிவுரையாளர் கலாநிதி ஆர்.நிர்த்திகா, மூத்த விரிவுரையாளர் ஈ.வை.ஏ.சார்லஸ் ஆகியோர் வளவாளராக கடமையாற்றினர் . இதில் மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுதேச மருத்துவத் […]
