கல்வி அமைச்சு

“நொண்டி நாடகம்” நூல் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பதிப்பிக்கப்பட்ட “நொண்டி நாடகம்” நூல் வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 29.11.2021 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். கிராமியக் கலைகளின் அடிநாதங்களாகத் திகழும் கூத்துக்களின் ஒரு அங்கமாகவே இந் நூலானது […]

“நொண்டி நாடகம்” நூல் வெளியீட்டு விழா -2021 Read More »

வாழ்வியலை மேம்படுத்துவதற்கான கருத்தரங்கு

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் பல்கலைக்கழக சமுதாய மருத்துவ துறையினரின் பங்களிப்புடன் கலாசாரத்தின் ஊடாக வாழ்வியலை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளுடன் கருத்தமர்வு 29.11.2021 ஆம் திகதி மு.ப 11.00 மணிக்கு கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலுக்கு அமைச்சின் செயலாளர், பிரதிப் பணிப்பாளர் மற்றும் சமுதாய மருத்துவ துறையினர் பங்குபற்றியிருந்தனர். யாழ் பல்கலைக்கழக சமுதாய மருத்துவபீடத்தினர் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து பிரதேசங்கள் தோறும் கலாசாரத்தின் ஊடாக வாழ்வியலை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளுடன் கடமையாற்றுவதற்கான ஒரு

வாழ்வியலை மேம்படுத்துவதற்கான கருத்தரங்கு Read More »

வட மாகாண  கலாச்சார திணைக்களத்தினால் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்  2021 நவம்பர் மாதம் 4 நூல்கள் வெளியிடப்பட்டன. வெளியீட்டு நிகழ்வுகள் வட மாகாண கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றன. பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர்    திருமதி சுஜீவா சிவதாஸ் அவர்கள் தலைமையில்  நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.  சிறப்பு விருந்தினர்களாக பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கலந்து சிறப்பித்தார்கள். பேராசிரியர்

வட மாகாண  கலாச்சார திணைக்களத்தினால் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டன Read More »

வழிபாட்டு தலங்களில் சேவை புரிபவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

வட மாகாண கௌரவ ஆளுநரின் நெறிப்படுத்தலின் கீழ் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழான பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியன இணைந்து வழிபாட்டுத் தலங்களில் சேவைபுரிபவர்களுக்கான இலசவ மருத்துவ முகாமினை 21 நவம்பர் 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் சிறப்பாக நடாத்தினார்கள். இந்நிகழ்வில் பெருமளவானோர் கலந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டதோடு மருத்துவ சிகிச்சையினையும் பெற்று பயனடைந்தனர்.    

வழிபாட்டு தலங்களில் சேவை புரிபவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் Read More »

புதிய கல்விக்கொள்கை பற்றி கருத்தறியும் ”டிஜிடல் தளம்” ஆரம்பம்

கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்து ”பேண்தகு கல்விக் கொள்கைச் சட்டகமொன்றை” உருவாக்குவதற்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் ”டிஜிடல் தளம்” ஒன்று ”அறிவையும் மனதையும் போஷிக்கும் முழுமையான கல்வியை நோக்கி” என்னும் கருப்பொருளுடன் உத்தியோகபூர்வமாக 26 மார்ச் 2021 அன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. அடுத்துவரும் 03 மாதங்கள் www.egenuma.moe.gov.lk எனும் இணையதளம் மூலம் மக்கள் புதிய கல்வி மறுசீரமைப்பிற்கான கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை அனுப்பிவைக்க முடியும். முன்பள்ளிக் கல்வி, ஆரம்ப மற்றும் இரண்டாம்

புதிய கல்விக்கொள்கை பற்றி கருத்தறியும் ”டிஜிடல் தளம்” ஆரம்பம் Read More »

கௌரவ ஆளுநரின் வாழ்த்துச் செய்தி

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2020 (2021 மார்ச்) மாணவர்களுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்கள் தனது நல்லாசிகளைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். கொவிட் – 19 தாக்கம் காரணமாக சுமார் ஒரு வருட காலமாக பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் மாணவர்கள் தமது பரீட்சைக்கான தயார்ப்படுத்தலை பாடசாலைகளிலும், சூம் செயலி (Zoom) ஊடாக நிகழ்நிலையிலும் தயார்ப்படுத்தியது மட்டுமல்லாது வீடுகளில் இருந்த காலத்தில் சுயகற்றலை மேற்கொண்டு தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்கள். அவர்களது கடின முயற்சிக்கான பலனை அடைவதற்கான ஓர்

கௌரவ ஆளுநரின் வாழ்த்துச் செய்தி Read More »

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நூல் வெளியீடு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் ,ளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பாசையூர் அண்ணாவியார் முடியப்பு அருட்பிரகாசம் அவர்களின் இரு கூத்துக்கள், கூத்திசை நாடகம், இலங்கை வேந்தன் இராவணேஸ்வரன் மற்றும் சிலம்பரசி நாட்டுக்கூத்துக்கள் ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா பாசையூர் புனித அந்தோனியார் பங்கு மண்டபத்தில் 14 பெப்பிரவரி 2021 அன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் மாவட்ட பதில் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திரு.மா.அருட்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நூல் வெளியீடு Read More »

வட மாகாண கலாச்சார திணைக்களத்தினால் மன்னாரில் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டன

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் புனித அந்தோனியார் நாடகம், புனித செபஸ்தியார் வாசகப்பா, மன்னார் மாதோட்டத் தமிழ் புலவர் சரித்திரம் ஆகிய மூன்று நூல்களின்; வெளியீட்டு விழா மாந்தை வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் 20.12.2020 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இமானுவேல்

வட மாகாண கலாச்சார திணைக்களத்தினால் மன்னாரில் நூல்கள் வெளியீடு செய்யப்பட்டன Read More »

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் கலை மற்றும் இலக்கியத் துறைக்கு பங்களிப்பு செய்து தற்போது வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு உதவுத் தொகை வழங்கல் நிகழ்வு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் உள்ள கலைஞர்களுக்கு உதவுதொகை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் 06 ஒக்டோபர் 2020 அன்று கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்கள் சிறப்பு

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் கலை மற்றும் இலக்கியத் துறைக்கு பங்களிப்பு செய்து தற்போது வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு உதவுத் தொகை வழங்கல் நிகழ்வு Read More »

மன்னார் மாதோட்ட வாசகப்பா நாடக மெட்டுக்கள் இறுவட்டு மற்றும் நூல் வெளியீடு

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் மன்னார் மாதோட்ட வாசகப்பா நாடக மெட்டுக்கள் (பாகம்-1) இறுவட்டு மற்றும் நூல் வெளியீடு நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் 29 பெப்பிரவரி 2020 சனிக்கிழமை பி.ப 2.30 மணிக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இமானுவேல் பெர்ணாண்டோ ஆண்டகை அவர்களும், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் கலை,

மன்னார் மாதோட்ட வாசகப்பா நாடக மெட்டுக்கள் இறுவட்டு மற்றும் நூல் வெளியீடு Read More »