கல்வி அமைச்சு

மாகாண விளையாட்டு விழா – 2024 குத்துச் சண்டைப் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான குத்துச்சண்டை போட்டி கடந்த 2024.05.25 ஆம் திகதி தொடக்கம் 27.05.2024 ஆம் திகதி வரை முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்தினைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகியது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகள் 27.05.2024 ஆம் திகதி மாலை 7.30 மணியளவில் போட்டிகள் நிறைவு பெற்றது. அதனைத் […]

மாகாண விளையாட்டு விழா – 2024 குத்துச் சண்டைப் போட்டி Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 ஜூடோ போட்டி

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் உள்ளக அரங்கில் கடந்த 19.05.2024 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வடமாகாண விளையாட்டுத திணைக்களத்தின் மாகாண ஜூடோ  போட்டி நடைபெற்றது. வடமாகாண விளையாட்டுத் திணைக்கள விளையாட்டு உத்தியோகத்தர்களுடன் அன்று காலை 9.00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் போட்டிகள் ஆரம்பமாகி மாலை 4.30 மணியளவில் நிறைவுபெற்றது. போட்டியில் பங்குபற்றிய வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த போட்டியாளர்களில் வெற்றியீட்டியவர்களுக்கு பதக்ககங்கள் மற்றம் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில்

மாகாண விளையாட்டு விழா – 2024 ஜூடோ போட்டி Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024  பளுதூக்கல் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான பளுதூக்கல்  போட்டி கடந்த 2024.05.12 ஆம் திகதி யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கத்தின் உள்ளக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தைச் சேர்ந்த வீரவீராங்கனைகள் பங்கு பற்றினார்கள். போட்டி அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 7.30 மணியளவில் போட்டிகள் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான , பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டன. மாகாண மட்டத்தில் ஆண்கள் அணி சார்பில்

மாகாண விளையாட்டு விழா – 2024  பளுதூக்கல் போட்டி Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 கராத்தே போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் கராத்தே போட்டி கடந்த 2024.05.11 ஆம் திகதி கிளிநொச்சியில் அமைந்துள்ள வடமாகாண விளையாட்டு கட்டிடத்தொகுதியின் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணத்தைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டி அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 7.00 மணியளவில் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டு நிறைவு பெற்றது. ,ந்நிகழ்வின் ஆரம்ப நிகழ்விற்கு கிளிநொச்சி மாவட்ட செயலக பிரதம

மாகாண விளையாட்டு விழா – 2024 கராத்தே போட்டி Read More »

இரு நூல்களின்  நூல் வெளியீட்டு வைபவம் -2024

வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியீடு செய்யும் திரு. கணேசஐயர் சௌந்தரராஜன் அவர்களின் “யாழ்ப்பாணத் தமிழியல் ஆய்வடங்கல்” மற்றும் திரு. நவரத்தினம் பரமேஸ்வரன் அவர்களின் “யாழ்ப்பாண கச்சேரியின் வரலாறு” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு வைபவமானது 2024.05.03 வெள்ளிக்கிழமை காலை 09.15 மணியளவில் கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் திருமதி.லாகினி நிருபராஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி,

இரு நூல்களின்  நூல் வெளியீட்டு வைபவம் -2024 Read More »

மாகாண விளையாட்டு விழா – 2024 கயிறு இழுத்தல் போட்டி

மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற மாகாண விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான கயிறு இழுத்தல் போட்டி கடந்த 2024.05.05 ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.தி. திரேஸ்குமார் அவர்கள், வவுனியா மாவட்டச் செயலக நிர்வாக உத்தியோகத்தர் திரு.ச. அரவிந்தன் மற்றும் விளையாட்டுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் வீரவீராங்கனைகளுக்கு கைலாகு கொடுத்து நிகழ்வினை ஆரம்பித்து

மாகாண விளையாட்டு விழா – 2024 கயிறு இழுத்தல் போட்டி Read More »

இலவச சித்த மருத்துவ முகாம்

“எல்லோர்க்கும் சித்த மருத்துவம்” என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் ,ந்தியத் துணைத்தூதரகத்துடன் இணைந்து கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமினை கடந்த 16.03.2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை நடாத்தியது.இந்நிகழ்வில் யாழ் ,ந்தியத் துணைத்தூதரக உயர் அதிகாரி, வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் சிரேஸ்ட உதவிச்செயலாளர்,

இலவச சித்த மருத்துவ முகாம் Read More »

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 2024

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் மாணவர் பாராளுமன்ற எண்ணக்கருவுக்கு அமைய, கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை பாராளுமன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த நாடளாவிய ரீதியில் மாணவர் பாராளுமன்றங்களை அமைப்பதன் இறுதிக்கட்டத்தை குறிக்கும் வகையில் இந்த தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள்

தேசிய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 2024 Read More »

தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2024

இலங்கை பாராளுமன்றத்தின் மாணவர் பாராளுமன்ற எண்ணக்கருவுக்கு அமைய  நடைபெற்று முடிந்த 2024ஆம் ஆண்டுக்கான தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவபடுத்திய  வவுனியா வடக்கு கல்வி வலய  வ/ கல்மடு மகா வித்தியாலய மாணவன் நாகராசா திலக்சன்  பிரதி சபாநாயகராகவும் பாடசாலைகளிற்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் பிரதி அமைச்சராக  வடமராட்சி கல்வி வலயத்தின்  யா/ ஹாட்லி கல்லூரியின்மாணவன்  மோகன் அர்ஜுன் அவர்களும்  தெரிவாகியுள்ளனர். இந் நிகழ்வில் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாணவ மாணவிகள் இந்தத் தேசிய மாணவர்

தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தல் 2024 Read More »

அரசாங்க படசாலைகளில் அனைத்து ஆரம்ப தரங்களின் மாணவர்களுக்கும்“ பாடசாலை உணவுத் திட்டத்தை” செயல்படுத்தல்

 “2024 ஆம் ஆண்டு முதல் அரசாங்க பாடசாலைகளில் அனைத்து ஆரம்ப தரங்களின் மாணவர்களுக்கும் பாடசாலை உணவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான” தேசிய திட்ட எண்ணக்கருவிற்கு அமைவாக அதிமேதகு ஜனாதிபதியினால் 25.03.2024 ஆம் திகதி கொழும்பு சுஜாத்தா மகளீர் கல்லுரியில் குறித்த திட்டம் செயற்படுத்தப்பட்டது. அதற்கு இணையாக மாகாண செயற்குழுக்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் பங்குபற்றுதலுடன்  மாகாண மட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு  யா/கொக்குவில் ஸ்ரீ ஞானபண்தடித வித்தியாசாலையில் கெளரவ ஆளுநர் பி.எஸ். எம் சார்ள்ஸ் அவர்கள் தலைமையில் 25.03.2024

அரசாங்க படசாலைகளில் அனைத்து ஆரம்ப தரங்களின் மாணவர்களுக்கும்“ பாடசாலை உணவுத் திட்டத்தை” செயல்படுத்தல் Read More »