உள்ளூராட்சி அமைச்சு

கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணக் கண்காட்சி – 2019

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் 2019 ஆண்டுக்கான மாகாண கண்காட்சியானது “மகளிர் மலர்ச்சியே கிராமிய மறுமலர்ச்சி” என்னும் தொனிப்பொருளில் 09 ஏப்ரல் 2019 அன்று காலை 08.30மணிக்கு ஆரம்பமாகி இரண்டு நாட்கள் (09,10-04-2019) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றுவருகிறது. கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி நளாயினி இன்பராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் இக்கண்காட்சியினை பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கலந்துகொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். சிறப்பு […]

கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணக் கண்காட்சி – 2019 Read More »

சர்வதேச மகளிர் தினம் – 2019

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் ‘நல்வாழ்வுக்கான சமத்துவம்’ எனும் சர்வதேச கருப்பொருளுடன் சர்வதேச மகளிர் தினம் 2019.03.08 அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண மகளிர் விவகாரம், கூட்டுறவு, சமூக சேவைகள், தொழிற்றுறை, அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக எழுத்தாளர், கவிஞர், ஓய்வு பெற்ற அதிபர் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக

சர்வதேச மகளிர் தினம் – 2019 Read More »

வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் மக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களினால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் அவர்களிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள்  நேற்று (04) வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இவ்வாறாக மயிலிட்டித்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 3 ஏக்கர் 120 பேர்ச்சஸ் , பலாலி கிழக்கு கிராம

வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு Read More »