ஒளி விழா– 2022
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய வட மாகாண ஒளி விழாவானது 2022.12.26 (திங்கட்கிழமை) பிற்பகல் 2.30மணியளவில் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலய மண்டபத்தில் அருட்பணி J.B அன்ரனிதாஸ் (பங்குத்தந்தை, புனித பேதுறு பாவிலு ஆலயம், நவாலி) அவர்களின் இறையாசியுடன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் திருமதி. ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், …