npc2018z

அமெரிக்க மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மற்றும் நெதர்லாந்து தூதுவரான ஜோன்னே டோர்னிவேர்ட் (Joanne Doornewaard) ஆகியோர் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை ஆளுநர் செயலகத்தில் 07 மார்ச் 2019 அன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களின் பொருளாதார நிலைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார ரீதியிலான பிரச்சனைகள் தொடர்பில் ஆளுநர் […]

அமெரிக்க மற்றும் நெதர்லாந்து தூதுவர்கள் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு Read More »

13வது மாகாண மட்ட பூப்பந்தாட்ட போட்டி

13வது மாகாண மட்ட மட்ட ஆண், பெண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டி மன்னார் உள்ளக விளையாட்டரங்கில் 01,02 மார்ச் 2019 அன்று இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13வது மாகாண மட்ட பூப்பந்தாட்ட போட்டி Read More »

13வது மாகாண மட்ட மேசைப்பந்துப் போட்டி

13வது மாகாண மட்ட  ஆண், பெண்களுக்கான மேசைப்பந்துப் போட்டி மன்னார் உள்ளக விளையாட்டரங்கில் 01,02 மார்ச் 2019 திகதிகளில் இடம்பெற்றது. வட மாகாண விளையாட்டுத் திணைக்களம் இப்போட்டியினை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13வது மாகாண மட்ட மேசைப்பந்துப் போட்டி Read More »

வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் மக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களினால் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகன் அவர்களிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள்  நேற்று (04) வலிகாமம் வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. இவ்வாறாக மயிலிட்டித்துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் 3 ஏக்கர் 120 பேர்ச்சஸ் , பலாலி கிழக்கு கிராம

வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு Read More »

இந்து குருக்கள் சபையின் தலைவர் – ஆளுநர் சந்திப்பு

இந்து குருக்கள் சபையின் தலைவர் சிவஸ்ரீ கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 04 மார்ச் 2019 அன்று முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.  மேலும்  மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் கவனம் செலுத்திய ஆளுநர் அவர்கள் , இந்த பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவரும் நோக்கில் அனைத்து மதங்களினுடைய

இந்து குருக்கள் சபையின் தலைவர் – ஆளுநர் சந்திப்பு Read More »

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி  சிவராத்திரி தினத்தின் மறுநாள் 05.03.2019 அன்று செவ்வாய்க்கிழமை வடமாகாண  பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அறிவித்துள்ளார். மேற்படி தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும்  மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தினத்திற்கான பதிற்பாடசாலை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை Read More »

சுவிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதி – கௌரவ ஆளுநர் சந்திப்பு

சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சினுடைய சமஷ்டி தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் மாட்டின் ஸ்ரெரர்ஷிங்கர்  அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (01) நண்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்திந்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாண மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன்  , இம்மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்தக்கூடிய வழிமுறைகள் குறித்தும்  அவதானம் செலுத்தப்பட்டது. வடமாகாணத்தில் நிலவும் காணி , நீர் , வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் குறித்தும்   இதன்போது

சுவிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதி – கௌரவ ஆளுநர் சந்திப்பு Read More »

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரு பாடசாலைக்கட்டடங்கள் கௌரவ ஆளுநர் தலைமையில் மாணவர்களிடம் கையளிப்பு

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரு பாடசாலைக்கட்டடங்கள் கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் 01 மார்ச் 2019 அன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன. யாழ் / பெரியபுலம் மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  மாணவர்களுக்கான ஆரம்ப கற்றல்வள நிலைய கட்டடத்தொகுதி மற்றும் யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட  அதிபர்  விடுதி, சிற்றுண்டிச்சாலை என்பன ஆளுநரால் திறந்துவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் உரையாற்றுகையில், கல்வியினால் மட்டும் அடையாளம் காணப்பட்ட சமூகம் நாங்கள். உடைந்துபோயுள்ள நம்

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரு பாடசாலைக்கட்டடங்கள் கௌரவ ஆளுநர் தலைமையில் மாணவர்களிடம் கையளிப்பு Read More »

151 பாடசாலைகளுக்கு ஆளுநர் தலைமையில் 2 கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

அனைத்து வளங்களும் நிறைந்த வடமாகாணம் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கும் மானியம் கொடுக்கக்கூடிய மாகாணமாக ஒரு நாள் மாறவேண்டும் என்பதே என் கனவு. அந்த கனவையே நான் இங்கு விதையாக விட்டுச்செல்ல விரும்புகின்றேன் என்று ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வடமாகாணத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட  பாடசாலைகளுக்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர்களினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கௌரவ ஆளுநர் அவர்கள் தலைமையில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் 28 பெப்பிரவரி 2019 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு  ஆளுநர்

151 பாடசாலைகளுக்கு ஆளுநர் தலைமையில் 2 கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு Read More »

நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம்வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் – ஆளுநர்

மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக நாம் பணிபுரிய வேண்டும். நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம் வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் என்று ஆளுநர் சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். வட மாகாண இளைஞர்,யுவதிகளின் தொழிற்கல்வியினை மேட்படுத்தும் நோக்கில் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் ,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட மாணவர் மற்றும் இளைஞர் யுவதிகளின் உயர்கல்வி,தொழிற்கல்வி தொடர்பிலான தகவல்கள் அடங்கிய கையேட்டினை வெளியிடும் நிகழ்வு ஆளுநர் தலைமையில் 28 பெப்பிரவரி 2019

நான் ஆளுநராக இருக்கும் கடைசி நிமிடம்வரை கல்விக்கு முதலிடம் கொடுப்பேன் – ஆளுநர் Read More »