தேசிய மட்டத்திற்கு போட்டியிடும் மாணவர்களுக்காக ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு – வடமாகாண ஆளுநர்
வடமாகாணத்திலிருந்து இம்முறை தேசிய மட்டத்திற்கு போட்டியிடும் மாணவர்களுக்காக ரூபா ஒரு மில்லியன் (ரூபா. 1,000,000) நிதியினை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளேன் என்று வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார். யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் 08 யூலை 2019 அன்று இடம்பெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். விழுந்துபோகாமல் வாழ்வது மட்டுமல்ல விளையாட்டில் எப்போதெல்லாம் நாம் வீழ்கின்றோமோ அப்போதெல்லாம் மீண்டும் எழக்கூடிய மனவலுவும் உடல்பலமும் […]
