Mathuranthaki

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் பாரம்பரிய உணவு பழக்கவழக்கம் தொடர்பான இறுவெட்டிற்குரிய உணவு தயாரிப்பு

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் பாடசாலை சமூகத்தினிடையே பாரம்பரிய உணவு மற்றும் அவற்றின் தயாரிப்பு முறை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களமானது Food & Agriculture Organization of United Nation இன் அனுசரனையுடன் செய்முறை காட்சிப்படுத்தல் ஒன்றினை தயாரித்து வருகின்றது. அதில் தமிழர்களின் பாரம்பரிய உணவு, சிற்றுண்டி மற்றும் பானங்கள் தொடர்பான செய்முறைகளுடன் கூடிய விளக்கங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இதனை தயாரித்து பாடசாலைகளிற்கு வழங்குவதன் […]

தொழில் முனைவுடன் கூடிய பாடசாலை தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சி திட்டத்தில் பாரம்பரிய உணவு பழக்கவழக்கம் தொடர்பான இறுவெட்டிற்குரிய உணவு தயாரிப்பு Read More »

பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழா

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழாவானது கடந்த 14.08.2023 ந் திகதியன்று நடைபெற்றது. மதியம் 12.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் புதிய கட்டடமானது வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. எஸ். மோகநாதன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண சுதேச மருத்துவ

பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழா Read More »

பரிகாரி இதழ் – II இறுவட்டு வெளியீடு

வடக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் இரண்டாவது இதழ் பரிகாரி – II இறுவட்டானது கடந்த 14.08.2023 ந் திகதியன்று பண்டதரிப்பு கிராமிய சித்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக கட்டடத்தின் திறப்பு விழாவின் போது வெளியிடப்பட்டது. இதனை வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலாளர் திருமதி. எஸ். மோகநாதன் அவர்கள் வெளியிட்டு வைத்ததுடன் வருகை தந்திருந்த அதிதிகள் சிலரிற்கும் இறுவட்டு வழங்கப்பட்டது.

பரிகாரி இதழ் – II இறுவட்டு வெளியீடு Read More »