76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை செயற்றிட்டம் – 2024

2024 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள சுதந்திர தின நினைவு நாளுக்கு இணையாக 2024.02.01 ம் திகதியிலிருந்து 2024.02.07 திகதி வரை பத்து இலட்சம் மருத்துவச்செடிகள் ‘சுவதரனி மருத்துவ செய்கை வாரம்’ பெயரில் நாடு முழுவதும் நடுகை செய்யும் தேசிய மர நடுகை வேலைத்திட்டம் பிரதமர் அவர்களின் தலைமையில் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டமானது மாகாண பிரதம செயலாளரின் மேற்பார்வையின் கீழ் மாகாண ஆயுர்வேத ஆணையாளர்களின் ஒழுங்குபடுத்தலில், அனைத்து பிரதேச செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் அனைத்து கிராம அலுவலக பிரிவிலும் நடுகை செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான கன்றுகளை ஆயுர்வேத பாதுகாப்பு சபை மூலம் மக்கள் சுகாதார வைத்திய அலுவலரின் ஒத்துழைப்பில் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அவர்களின் தலைமையில் 01.02.2024 அன்று வியாழக்கிழமை  வடக்கு மாகாணசபையின் வெளிப்புற வளாகத்தில் சுவதரனி மருத்துவ செய்கை வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம செயலாளர், உதவிப்பிரதம செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் ஏனைய பிரதம செயலாளர் செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடுகை செய்திருந்தார்கள்.