49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கு மாகாணம் புதிய சாதனை

  • உதைபந்தாட்டத்தில் 4வது தடவையாகவும் சம்பியன்
  • கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனை
  • 8 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்களைத் கைப்பற்றியது.!

இலங்கையின் 49 வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் காலி தடல்ல விளையாட்டரங்கில் ஆகஸ்ட் மாதம் 29,30, 31 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண வீர வீராங்கனைகள் 8 தங்கம் 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தமாக 23 பதக்கங்களை பெற்று வடக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். குழுவிளையாட்டுக்களில் 05 பதக்கங்களும் தனிநபர் விளையாட்டுக்களில் இருவர் இரட்டைப் பதக்கங்கள் உட்பட 18 பதக்கங்களும் அடங்குகின்றன.

உதைபந்தாட்டம் : உதைபந்தாட்ட ஆண்கள் அணி தொடர்ச்சியாக நான்காவது தடவையாகவும் தேசிய விளையாட்டு விழாவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அத்துடன் உதைபந்தாட்ட பெண்கள் அணி முதன்முறையாக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர்.

கோலூன்றிப்பாய்தல் : ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வன் யு. புவிதரன் அவர்கள் 5.12 மீற்றர் உயரத்தைத்தாண்டி தங்கம் வென்று புதிய போட்டிச் சாதணையை நிலைநாட்டி தனது முன்னைய சாதனையினை முறியடித்துள்ளார் என்பது மற்றுமொரு விசேட அம்சமாகும்.
இப்போட்டியில் பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் சாவகச்சேரியைச் சேர்ந்த செல்வி டக் ஷிதா நேசராசா அவர்கள் 3.52 மீற்றர் உயரத்;தை தாண்டி தங்கம் வென்றுள்ளதுடன், தேசிய விளையாட்டு விழாவின் போட்டிச் சாதனையை நிலைநாட்டியதுடன் தனது முன்னைய சாதனையினை முறியடித்துள்ளார் என்பது விசேடமாகும்.
அத்துடன் பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் P. அபிசாலினி 3.10 மீற்றர் உயரத்தை தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனையை நிலைநாட்டியதுடன் 2.90 மீற்றர் உயரத்தை தாண்டிய லு. நிரு~h நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

10000 மீற்றர் மற்றும் 5000 மீற்றர் ஓட்டம் : வவுனியா மாட்டத்தைச் சேர்ந்த ஐ. விகிர்தன் 10000 மீற்றரை ஓட்டத்தூரத்தை 31:36:02 நேரத்தில் கடந்து தங்கப்பதக்கத்தையும், 5000 மீற்றரை ஓட்டத்தூரத்தை 15:02:45 நேரத்தில் ஓடி வெள்ளிப்பதக்கத்தை பெற்று இரட்டைப் பதக்கங்களைப் பெற்ற சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆண்களுக்கான குண்டெறிதல் மற்றும் பரிதி வட்டம் வீசுதல் : யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எஸ் மிதுன்ராஜ் அவர்கள் ஆண்களுக்கான குண்டெறிதல் போட்டியில் 15.40 மீற்றர் தூரத்திற்கும் பரிதி வட்டம் வீசுதலில் 48.08 மீற்றர் தூரத்திற்கும் எறிந்து இரட்டைத் தங்கம் வென்று சாதனை நிலைநாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடைப்பந்து : கூடைப்பந்தாட்டத்தில் வடக்கு மாகாணத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் இம்முறை வெள்ளிப்பதக்கத்தைப் பெற்று வெற்றியீட்டி மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பளு தூக்குதல் : பளு தூக்குதல் போட்டியில் பெண்கள் பிரிவில் எஸ். தனுசியா (69 கிலோகிராம்) மற்றும் து.பஜீனா (77 கிலோகிராம்) ஆகியோர் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தைப்பெற்று வெண்கலப்பதக்கத்தை தம்வசப்படுத்தி வெற்றியீட்டியுள்ளனர்.

Takewondo: Fly 46-49 கிலோ எடை பெண்கள் பிரிவில் கே. சானுஜா அவர்கள் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

குத்துச்சண்டை: குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்குபற்றிய வடக்கு மாகாண வீரர்கள் 2 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 08 பதக்கங்களை பெற்று மாகாணத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர். 66-70 கிலோ எடை குத்துச்சண்டை பெண்கள் பிரிவில் செல்வி. சசிகுமார் ஜெஸ்மிதா அவர்கள் தங்கம் வென்றுள்ளார். 49வது தேசிய விளையாட்டு விழாவின் சிறந்த குத்துச்சண்டை வீராங்கனையாக வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ரு. கீர்தனா அவர்கள் 57-60 கிலோகிராம் எடைப் பிரிவில் பங்குபற்றி தங்கப்பதக்கம் வென்று மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் ஆண்கள் பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களும் பெண்கள் பிரிவில் மூன்று வெள்ளி,இரண்டு வெண்கலப் பதக்கங்களும் மாகாணத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். அவை தொடர்பான விபரம் வருமாறு.

பெயர் எடைப் பிரிவு பதக்கம்
N.சிறிகரிஸ் 51-54 kg வெண்கலம்
N.சுஜீவன் 60-63.5 kg வெண்கலம்
S.ஜானுபிரியா 45-48 kg வெள்ளி
L.லதுர்சனா 50-52 kg வெண்கலம்
L.கஜேந்தினி 52-54 kg வெள்ளி
N.ஜிதுர்சிகா 60-63 kg வெள்ளி

வன்பந்துக் கிரிக்கெட் : வடக்கு மாகாண கிரிக்கட் ஆண்கள் அணி முதன் முறையாக தேசிய விளையாட்டு விழாவில் நடாத்தப்பட்ட வன்பந்துக் கிரிக்கட் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளனர்.