2027ஆம் ஆண்டுக்கான மாகாண அபிவிருத்தித் திட்டங்களில் மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை – ஆளுநர்.
வடக்கு மாகாணத்தில் 2027ஆம் ஆண்டு முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மக்களின் உண்மையான தேவைகளையும் களப் பயணங்களின் போது அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சபையால் 2027ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (26.11.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், மக்களிடமிருந்து அவர்களின் தேவைகள் தொடர்பான […]
