மாற்றுத்திறனாளிகள் மாகாண மட்டத்தைக் கடந்து தேசிய, சர்வதேச மட்டங்களிலும் சாதிக்க வேண்டும் – ஆளுநர்
மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்லர். இன்று மாகாண மட்டத்தில் சாதிக்கும் நீங்கள், நாளை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களிலும் சாதனை படைக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாகாண மட்ட மெய்வல்லுநர் போட்டிகளும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வும் இன்று (13.10.2026) செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். நிகழ்வுக்கு […]
