September 4, 2026

யாழ்., கிளிநொச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் காணியற்ற குடும்பங்களுக்கு 30 வீடுகள் – லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளை நடவடிக்கை

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளையால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வீட்டுத் திட்டம் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (03.09.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் வீட்டுத் தேவைகள் தொடர்பில் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளையிடம் ஆளுநரால் நேரடியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, இத்திட்டத்தின் முதல் கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் […]

யாழ்., கிளிநொச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் காணியற்ற குடும்பங்களுக்கு 30 வீடுகள் – லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளை நடவடிக்கை Read More »

நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட கோரிக்கைகள் குறித்து உரிய அரச ஆவணங்களின் அடிப்படையில் விடயத்தைத் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்த பெயர் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் இரு வார கால அவகாசம் வழங்கினார். கிளிநொச்சி, நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் மற்றும் அது சார்ந்த நடைமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (03.09.2026) வியாழக்கிழமை முற்பகல்

நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் Read More »

வடக்கு மாகாண சபைக்கு முதன்முறையாக ‘முனைப்பழியற்ற அபிப்பிராயம்’; வரலாற்றுச் சாதனை

மாகாண சபை வரலாற்றில் முதல் தடவையாக தேசிய கணக்காய்வுத் தலைமை அதிபதியால் வடக்கு மாகாண சபைக்கு 2025ஆம் ஆண்டுக்கான ‘முனைப்பழியற்ற அபிப்பிராயம்’ (Unqualified Opinion) வழங்கப்பட்டிருப்பது, வடக்கு மாகாண நிர்வாக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான மைல்கல் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பெருமிதத்துடன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபைக்கும், அதன் கீழ் இயங்கும் ஒன்பது திணைக்களங்களுக்கும் 2025ஆம் ஆண்டுக்கான முனைப்பழியற்ற அபிப்பிராயம் கிடைக்கப்பெற்றமை மற்றும் இலங்கை அரச நிதிக் கணக்காளர்கள் சங்கத்தால்

வடக்கு மாகாண சபைக்கு முதன்முறையாக ‘முனைப்பழியற்ற அபிப்பிராயம்’; வரலாற்றுச் சாதனை Read More »

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும்

எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில், முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்வளம் பேணுதலுக்கான பேராய்வுச் செயற்றிட்டம் மற்றும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள ‘நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி’ எனும் தொனிப்பொருளிலான நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி,

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும் Read More »

வீட்டுக்குள் இருக்கும் திறமைகள் குடும்பத்தின் பொருளாதார வலிமையாக மாற வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்

பெண்களிடமும் இளையோரிடமும் ஏற்கனவே காணப்படும் திறமைகள் வெறுமனே காட்சிப்படுத்தப்படும் திறமைகளாக மட்டுப்படாமல், வருமானம் ஈட்டும் தொழில்களாகவும், நிலையான வாழ்வாதாரங்களாகவும், எதிர்காலத்தில் பிறருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முயற்சிகளாகவும் வளர வேண்டும். பயிற்சியின் உண்மையான வெற்றி சான்றிதழ் பெறுவதில் அல்ல, அந்தப் பயிற்சியின் மூலம் ஒருவரின் வாழ்க்கையிலும் குடும்பத்தின் பொருளாதார நிலையிலும் ஏற்படும் மாற்றத்திலேயே உள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாணக் கண்காட்சி –

வீட்டுக்குள் இருக்கும் திறமைகள் குடும்பத்தின் பொருளாதார வலிமையாக மாற வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் Read More »