August 15, 2026

வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திப் பங்களிப்பை 4.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த இலக்கு – ஆளுநர் நா. வேதநாயகன்

வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5 சதவீதமாகக் காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம் நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்கை விரைவாக எட்டுவதற்கு தொழில் முயற்சியாளர்களின் பேராதரவும், விடாமுயற்சியும், புதியதைச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் எமக்குத் தேவை. தற்போதைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் எமக்குக் கிடைத்துள்ள சாதகமான நிலைப்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி இந்த இலக்கை எட்டுவோம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண தொழிற்துறைத் […]

வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திப் பங்களிப்பை 4.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்த இலக்கு – ஆளுநர் நா. வேதநாயகன் Read More »

“உள்ளூராட்சி மன்றங்கள் மீதான எனது நடவடிக்கைகள் எவரையும் இலக்காகக் கொண்டவை அல்ல; மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே ஒரே நோக்கம்” – ஆளுநர்

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் எந்தவொரு தனிநபரையும், அரசியல் கட்சியையும் அல்லது எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்தையும் இலக்காகக் கொண்டவை அல்ல எனத் தெரிவித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், மக்கள் ஒப்படைத்துள்ள பொறுப்பையும், நிர்வாகத்தின் மீதான அவர்களது நம்பிக்கையையும் பாதுகாப்பதே தமது நடவடிக்கைகளின் ஒரே நோக்கம் என வலியுறுத்தினார். ஒரு நல்ல நிர்வாகியின் கடமை எப்போதும் பாராட்டைப் பெறுவது அல்ல, மக்களின் நீண்டகால நலனுக்காகத் தேவையானபோது கடினமான முடிவுகளையும் எடுப்பதாகும் எனவும்

“உள்ளூராட்சி மன்றங்கள் மீதான எனது நடவடிக்கைகள் எவரையும் இலக்காகக் கொண்டவை அல்ல; மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே ஒரே நோக்கம்” – ஆளுநர் Read More »

“பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நிலத்தடி நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையிலான கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது” – வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன்

நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களின் அடிப்படை நோக்கத்தையே பாதிக்கும் வகையிலான கருத்துக்களும் கோரிக்கைகளும் முன்வைக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பது குறுகியகால தேவைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அல்லாது, அறிவியல் ஆதாரங்கள், நீண்டகால திட்டமிடல் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனை முன்னிறுத்திய பொறுப்புணர்வுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி

“பல மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் நிலத்தடி நீர்ப் பாதுகாப்புத் திட்டங்களின் நோக்கத்தை சிதைக்கும் வகையிலான கருத்துக்களுக்கு இடமளிக்கக் கூடாது” – வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் Read More »