கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வடக்கு மாகாண ஆளுநரின் வாழ்த்துச் செய்தி
மாணவ, மாணவியர்களே, நாளை (10.08.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் பங்கேற்கவுள்ள வடக்கு மாகாணத்தின் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்ற பெருமையை அடைந்தது. அந்தச் சாதனை வெறுமனே ஒரு புள்ளிவிபரமல்ல, அது எமது மாணவர்களின் விடாமுயற்சிக்கும், பெற்றோரின் தியாகத்துக்கும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். இந்த ஆண்டும் அந்தப் பெருமையைத் […]
