July 24, 2026

யாழ். மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்ட கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், கௌரவ ஆளுநரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்

மத்திய அரசாங்கத்தின் ஊடாக கலாசார உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குதல் மற்றும் வடக்கு மாகாணத்திலுள்ள கலாசார நிலையங்களின் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்தல் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்களிடம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரத்தியேக கோரிக்கைகளை முன்வைத்தார். யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (23.07.2026) வியாழக்கிழமை உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள கௌரவ அமைச்சர் அவர்கள், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்து ஆளுநரை […]

யாழ். மாவட்டத்துக்கு உத்தியோகபூர்வப் பயணமொன்றை மேற்கொண்ட கௌரவ புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், கௌரவ ஆளுநரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார் Read More »

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர், யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம், யாழ். பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இன்று (23.07.2026) வியாழக்கிழமை உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர், யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம் மற்றும் யாழ்ப்பாணம் பொது நூலகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்துக்கு எதிரே அமைந்துள்ள தொன்மை வாய்ந்த பழைய மாவட்டச் செயலகக் கட்டடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் தலைமையிலான குழுவினர், அதன்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர், யாழ்ப்பாண பழைய மாவட்டச் செயலகக் கட்டடம், யாழ். பொது நூலகம் ஆகியவற்றை பார்வையிட்டனர். Read More »

இசையால் எல்லைகளைத் தாண்டி மனித மனங்களை இணைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது பெயரில் வீதியொன்றைத் திறந்து வைத்துக் கௌரவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். – கௌரவ ஆளுநர்

இன்று திறக்கப்பட்டுள்ள இந்த வீதி வெறுமனே ஒரு போக்குவரத்துப் பாதையாக அமையாது, எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு மாபெரும் கலைஞனின் அர்ப்பணிப்பையும், இந்திய – இலங்கை நாடுகளுக்கிடையிலான ஆழமான கலாசாரப் பிணைப்பையும் நினைவூட்டும் வரலாற்றுச் சுவடாகவே நிலைத்திருக்கும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இசையால் எல்லைகளைத் தாண்டி மனித மனங்களை இணைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவர் வாழ்ந்து சேவையாற்றிய மண்ணில், அவரது பெயரில் வீதியொன்றைத் திறந்து வைத்துக் கௌரவிப்பதில் தான் மட்டற்ற

இசையால் எல்லைகளைத் தாண்டி மனித மனங்களை இணைத்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது பெயரில் வீதியொன்றைத் திறந்து வைத்துக் கௌரவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். – கௌரவ ஆளுநர் Read More »

எமது மாகாணத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய முதலீடுகளை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம்,’ – கௌரவ ஆளுநர்

ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியின் கீழ், ஜேர்மனியின் ஆசிய-பசிபிக் வர்த்தக சங்கம் உள்ளூர் பங்காளர்களுடன் இணைந்து, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் ஜேர்மன் நிபுணர் குழுவுக்கும் இடையில் இன்று (22.07.2026) புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஜேர்மனியின் sequa gGmbH நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் கலாநிதி. ரோலண்ட் ஸ்ட்ரோஹ்மேயர், Kasoma

எமது மாகாணத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் புதிய முதலீடுகளை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம்,’ – கௌரவ ஆளுநர் Read More »

யாழ். இந்துக் கல்லூரியின் அழைப்பின் பேரில், ”SCIVERSE 2K26′ விஞ்ஞானச் செய்முறைக் கண்காட்சியைச் கௌரவ ஆளுநர் பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நிர்வாகத்தின் அழைப்பின் பேரில், கல்லூரி வளாகத்தில் இடம்பெற்று வரும் ”SCIVERSE 2K26′ விஞ்ஞானச் செய்முறைக் கண்காட்சியைச் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (22.07.2026) புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியானது, கல்லூரியின் உயர்தரப் பிரிவு வளாகத்தில் ‘பரிசோதிப்போம், ஆராய்வோம், சிறந்து விளங்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்களுக்கு

யாழ். இந்துக் கல்லூரியின் அழைப்பின் பேரில், ”SCIVERSE 2K26′ விஞ்ஞானச் செய்முறைக் கண்காட்சியைச் கௌரவ ஆளுநர் பார்வையிட்டார். Read More »

வடக்கு மாகாணத்தின் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன், பயன்படுத்தப்படும் வளங்களினூடான உற்பத்திகளுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

எமது பிரதேசத்தைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை, கொழும்பைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் நேரடியாகக் கொள்வனவு செய்வதற்குரிய வணிக இணைப்பை ஏற்படுத்தும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது, என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வணிக இணைப்புக் கருத்தரங்கு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று

வடக்கு மாகாணத்தின் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன், பயன்படுத்தப்படும் வளங்களினூடான உற்பத்திகளுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை. – கௌரவ ஆளுநர் தெரிவித்தார். Read More »