July 22, 2026

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது, தென்னிலங்கையில் சிலர் ‘இராணுவத்தினரின் காணிகளை மக்களுக்கு வழங்குவதாக’ இனவாத நோக்கில் குரல் எழுப்புகின்றனர். ஆனால், இராணுவம் விடுவிப்பது அந்த மக்களின் சொந்தக் காணிகளையே தவிர இராணுவத்தினரின் காணிகளை அல்ல. இந்த அரசாங்கம் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கான செயன்முறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். ஐரோப்பிய […]

ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர். Read More »

மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ். மாவட்டத்துக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு கௌரவ ஆளுநர் அறிவுறுத்தல்

மன்னார் மாவட்டத்தில் மணலுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ்ப்பாண மாவட்டத்துக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும் வெகுவிரைவில் ஏனைய மாவட்டங்களுக்கான மணல் விநியோகம் ஆரம்பிக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தில் மணல் மற்றும் கிரவல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பில்

மன்னார் மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி யாழ். மாவட்டத்துக்குத் தேவையான மணலைப் பெற்றுக்கொள்வதற்குத் துரித நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு கௌரவ ஆளுநர் அறிவுறுத்தல் Read More »

ஆளுநர் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம், தனது வரலாற்றில் முதன்முறையாக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் நடாத்தப்படும் ‘தேசிய உற்பத்தித்திறன் விருதுகளுக்கு’ இம்முறை விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில், ஆளுநர் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (21.07.2026) செவ்வாய்க்கிழமை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். ஆளுநர் செயலகத்தின் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் நேரில் சென்ற கௌரவ ஆளுநர் அவர்கள், அங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள வினைத்திறனான செயற்பாடுகள், ஆவணப்படுத்தல் நடைமுறைகள்

ஆளுநர் செயலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் உற்பத்தித்திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். Read More »