நெடுந்தீவு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு புதிய எதிர்ச் சவ்வூடு பரவல் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துத் தருமாறு ஆசிய அபிவிருத்தி வாங்கினரிடம் கௌரவ ஆளுநர் கோரிக்கை
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தமக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், அதற்கமைவாகத் தமது செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் தெரிவித்தனர். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் நீர் மற்றும் நகர்ப்புற அபிவிருத்திப் பணிப்பாளர் மனோஜ் சர்மா, பணிப்பாளர் சபையின் ஆலோசகர் மொன் வான் டெர் வ்லியட் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிமனையின் […]
