‘வர்ண இரவு’ விருது வழங்கலில் குழு விளையாட்டுக்களுக்காக வழங்கப்படும் பரிசுதொகையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்
தேசிய மட்டத்தில் சாதிக்கும் வடக்கு மாகாண விளையாட்டு வீரர்களைக் கௌரவிக்கும் ‘வர்ண இரவு’ விருது வழங்கலின் போது வழங்கப்படும் பரிசுத் தொகையில், குழு விளையாட்டுக்களுக்கான தொகையை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன், பரிசுத் தொகை மற்றும் விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விசேட குழுவொன்றையும் அவர் நியமித்துள்ளார். வடக்கு மாகாண விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பான விசேட கலந்துரையாடல் […]
