May 5, 2026

கௌரவ ஆளுநர் தலைமையில், கூட்டுறவுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு மற்றும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (04.05.2026) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கூட்டுறவுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, பணியாளர்களுடன் தொடர்புடைய நிர்வாக விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை எவ்வித தாமதமுமின்றி விரைவுபடுத்துதல் தொடர்பில் ஆளுநரால் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அத்துடன், பணிகளை மேலும் […]

கௌரவ ஆளுநர் தலைமையில், கூட்டுறவுப் பணியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. Read More »

வடக்கு மாகாணம் ‘மெரிட்’ அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

அனைத்துப் பரீட்சார்த்திகளிலிருந்தும் பல்கலைக்கழக நுழைவுச் சதவீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் பெற்றுள்ள முதலிடத்தைத் தக்கவைப்பதற்கு அப்பால், அந்த அடைவு மட்டத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும், குறிப்பாக ‘மெரிட்’ அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் அவர்களின்

வடக்கு மாகாணம் ‘மெரிட்’ அடிப்படையிலான பல்கலைக்கழக நுழைவு எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தீவிர கவனம் செலுத்த வேண்டும் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். Read More »