வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தின் வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட விசேட ஒருங்கிணைப்புக் கூட்டம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று (07.04.2026) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணத்தின் பொருளாதாரச் சுழற்சியை மேம்படுத்துவதற்காக அரச, தனியார், நிதி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களுக்கிடையில் வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதே இந்தக் கூட்டத்தின் பிரதான நோக்கமாகும். குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர […]
