April 4, 2026

யாழ்ப்பாண மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (03.04.2026) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், கடலட்டைப் பண்ணைகளுக்காக அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள குத்தகைக் கட்டணத்தைச் செலுத்துவதில் தாங்கள் எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் பண்ணையாளர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்தக் குத்தகைக் கட்டணத்தைக் கணிப்பிட்டபோது, கடலட்டையின் சர்வதேச சந்தை விலை வீழ்ச்சி கருத்தில் கொள்ளப்படவில்லை எனச் […]

யாழ்ப்பாண மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் மற்றும் கௌரவ ஆளுநர் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »

வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக முன்மொழியப்பட்ட இரண்டு பிரதான செயற்றிட்டங்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது – உலக வங்கிப் பிரதிநிதிகள் கௌரவ ஆளுநரிடம் தெரிவித்தனர்.

உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள ‘ரிவைவ்’ (REVIVE – Regional Empowerment through Vibrant, Inclusive, and Viable Economies) திட்டத்தின் கீழ், வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக முன்மொழியப்பட்ட இரண்டு பிரதான செயற்றிட்டங்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக உலக வங்கிப் பிரதிநிதிகள் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் இன்று (03.04.2026) தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை கௌரவ ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடிய உலக

வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக முன்மொழியப்பட்ட இரண்டு பிரதான செயற்றிட்டங்களுக்கு உத்தியோகபூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது – உலக வங்கிப் பிரதிநிதிகள் கௌரவ ஆளுநரிடம் தெரிவித்தனர். Read More »

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அதிபர் சேவைச் சங்கம் ஆகியனவற்றின் பிரதிநிதிகளுக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியனவற்றின் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (02.04.2026) வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கௌரவ பிரதியமைச்சருமான மஹிந்த ஜயசிங்க அவர்கள், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் மிகச் சிறந்த சாதனையுடன்

இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம், அதிபர் சேவைச் சங்கம் ஆகியனவற்றின் பிரதிநிதிகளுக்கும் கௌரவ ஆளுநருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. Read More »