March 20, 2026

‘தற்போதைய புறச்சூழலைக் காரணம் காட்டி, எந்தவொரு திணைக்களமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதை இடைநிறுத்தக் கூடாது’ – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நிதியொதுக்கீடுகளைக் கருத்திற் கொண்டு, மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றியும், தடங்கலின்றியும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தற்போதைய நெருக்கடியான புறச்சூழலில் மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதில் காணப்படுகின்ற சவால்கள் மற்றும் அதற்கான மாற்று ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2026) காலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் […]

‘தற்போதைய புறச்சூழலைக் காரணம் காட்டி, எந்தவொரு திணைக்களமும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதை இடைநிறுத்தக் கூடாது’ – கௌரவ ஆளுநர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். Read More »

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். பயணி ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 14.03.2026 அன்று தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளை, பேருந்து பழுதடைந்துவிட்டதாகக் கூறி நடத்துனர் இடைநடுவில் இறக்கிவிட்டுள்ளார்.

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை Read More »