இனிவரும் காலங்களில் வர்ண இரவு விருது வழங்கும் விழா தொடர்ச்சியாக நடைபெறும்,’ – கௌரவ ஆளுநர் உறுதியளித்தார்.
விளையாட்டு வீரர்களின் நியாயமான மனக்குறைகளுக்குத் தீர்வு காணப்படும்; எனவும் இனித் தடங்கலின்றி வர்ண இரவு விருது வழங்கல் நடைபெறும் என்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், தேசிய மட்டத்தில் சாதனை படைத்த வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் ‘வர்ண இரவு – 2025’ நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இன்று புதன்கிழமை (04.03.2026) மாலை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் […]
