March 2026

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் சர்வதேச மகளிர் தின (08.03.2026) வாழ்த்துச் செய்தி

சர்வதேச மகளிர் தினத்தில் எமது வடக்கு மாகாணப் பெண்களுக்கும், உலகெங்கும் வாழும் அனைத்துப் பெண்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் அதியுயர் கௌரவத்தையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமையடைகின்றேன். போர் தின்று தீர்த்த எமது வடக்கு மண்ணில், பெண்களின் வகிபாகம் என்பது வெறுமனே குடும்ப நிர்வாகம் என்பதையும் தாண்டி, ஓர் ஒப்பற்ற தியாக வரலாறாகவே அமைந்துள்ளது. குறிப்பாக, எமது மாகாணமானது பெண் தலைமைத்துவக் குடும்பங்களை அதிகளவில் கொண்டதொரு நிலப்பரப்பாகும். குடும்பத்தின் ஆணிவேராக இருந்தவர்களை இழந்த நிலையிலும், பெருந்துயரங்களுக்கு மத்தியிலும், அந்தக் […]

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் சர்வதேச மகளிர் தின (08.03.2026) வாழ்த்துச் செய்தி Read More »

மகளிர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை, தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06.03.2026) மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், கடந்த 2025ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் அடைவுகள் மற்றும் தற்போது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. அத்துடன், நடப்பு

மகளிர் விவகார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு மாகாண சபையின் நிதியுடனும் விவசாயிகளின் நேரடிப் பங்களிப்புடனும் முன்னெடுக்கப்பட்ட நவீன விவசாய முறைத் திட்டங்கள் பெருமளவு வெற்றியைத் தந்துள்ளமையால், அத்திட்டங்களைத் தொடர்ந்தும் விரிவாக முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர் விநியோகம் மற்றும் சுற்றாடல் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06.03.2026) காலை நடைபெற்றது.

விவசாய அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. Read More »

சுகாதார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (05.03.2026) மாலை நடைபெற்றது. இக்கலந்துரையாடலின்போது, 2025ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு நடப்பாண்டிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், அவ்வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் நிலவும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. மேலும், 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்களுக்கான

சுகாதார அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. Read More »

இனிவரும் காலங்களில் வர்ண இரவு விருது வழங்கும் விழா தொடர்ச்சியாக நடைபெறும்,’ – கௌரவ ஆளுநர் உறுதியளித்தார்.

விளையாட்டு வீரர்களின் நியாயமான மனக்குறைகளுக்குத் தீர்வு காணப்படும்; எனவும் இனித் தடங்கலின்றி வர்ண இரவு விருது வழங்கல் நடைபெறும் என்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார். வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், தேசிய மட்டத்தில் சாதனை படைத்த வீர, வீராங்கனைகளைக் கௌரவிக்கும் ‘வர்ண இரவு – 2025’ நிகழ்வு சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இன்று புதன்கிழமை (04.03.2026) மாலை கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்

இனிவரும் காலங்களில் வர்ண இரவு விருது வழங்கும் விழா தொடர்ச்சியாக நடைபெறும்,’ – கௌரவ ஆளுநர் உறுதியளித்தார். Read More »

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை உரிய காலவரையறைக்குள் நிறைவு செய்வதுடன், அவற்றின் உயர்தரத்தையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்,’ – கௌரவ ஆளுநர் வலியுறுத்தினார்.

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆளணியின் ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும்

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை உரிய காலவரையறைக்குள் நிறைவு செய்வதுடன், அவற்றின் உயர்தரத்தையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்,’ – கௌரவ ஆளுநர் வலியுறுத்தினார். Read More »

வடக்கு மாகாணத்தில் 10 ஆண்டுகளின் பின்னர் ‘மருத்துவமனை மேற்பார்வையாளர்’ பதவி உயர்வுக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மருத்துவமனைகளின் நற்பெயரைப் பாதுகாப்பதிலும், நோயாளர் சேவைகளைத் திருப்திகரமான முறையில் வழங்குவதிலும் மருத்துவமனை மேற்பார்வையாளர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் ‘மருத்துவமனை மேற்பார்வையாளர்’ பதவி உயர்வுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03.03.2026) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு

வடக்கு மாகாணத்தில் 10 ஆண்டுகளின் பின்னர் ‘மருத்துவமனை மேற்பார்வையாளர்’ பதவி உயர்வுக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. Read More »

‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பசுமையான மற்றும் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறன்மிக்க ஒரு நகரமாக மாற்றியமைக்கும் உயரிய நோக்கோடு, ‘இம்பக்ட்’ அணியினரால் ‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மாதிரிச் செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03.03.2026) காலை இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின்போது, இச்செயற்றிட்டம் தொடர்பில் இம்பக்ட் அணியினரால் ஆளுநருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இது வெறுமனே ஒரு மரநடுகைத் திட்டமாக

‘பசுமை யாழ்ப்பாணம்’ எனும் விசேட செயற்றிட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல், கௌரவ ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது. Read More »

எமது மாகாணச் சிறுவர்களின் தனித்துவமான மற்றும் பொதுவான பிரச்சினைகளைச் சரியான முறையில் இனங்கண்டு, அவற்றை இயலுமானவரை தீர்த்து வைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார்.

சிறுவர்களின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் ஒளிமயமான வாழ்வை உருவாக்கிக் கொடுப்பது எம் அனைவரதும் தலையாய பொறுப்பும் கடமையுமாகும் எனவும், இக்கருத்தரங்கின் ஊடாக முன்வைக்கப்படும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண நிர்வாகம் தனது முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘சிறுவர் நலன் மற்றும் பாதுகாப்பு’ எனும் தொனிப்பொருளிலான விசேட கருத்தரங்கு – 2026 இன்று

எமது மாகாணச் சிறுவர்களின் தனித்துவமான மற்றும் பொதுவான பிரச்சினைகளைச் சரியான முறையில் இனங்கண்டு, அவற்றை இயலுமானவரை தீர்த்து வைக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார். Read More »

வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், – கௌரவ ஆளுநர் கோரிக்கை

வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் சுற்றாடல் அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். தேசிய சுற்றாடல் சட்டவரைவு திருத்தம் தொடர்பான அறிவூட்டல் மற்றும் கருத்துக்கேள் கலந்துரையாடல், சுற்றாடல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக பதபெந்தி அவர்களின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01.03.2026) காலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதார நிலங்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், – கௌரவ ஆளுநர் கோரிக்கை Read More »