ஆளுமையுடன் கூடிய முழுமையான கல்வியைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களே நாளை சிறந்த தலைவர்களாக மிளிர்வார்கள் – கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக உயர் பதவிகளை, இம்மாவட்டத்தைச் சேர்ந்த இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் அலங்கரிக்க வேண்டும் எனவும், அதற்காகக் கல்வியுடன் மாத்திரமன்றி ஆளுமையையும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். முல்லைத்தீவு மாவட்ட செயலகம், முல்லைத்தீவு மாவட்ட கல்விக்கும் அபிவிருத்திக்குமான நம்பிக்கை நிதியம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட ‘பண்டாரவன்னியன் நினைவு சதுரங்க மற்றும் பேச்சுப் போட்டி – […]
