துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர், பிரதி அமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவினர் வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.
வடக்கு மாகாண இளைஞர்களிடையே சிவில் விமானப் போக்குவரத்துத் துறை சார்ந்த கல்விகளை ஊக்குவிக்கும் நோக்கிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடலும், அதனைத் தொடர்ந்து பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான நேரடி களப் பயணமும் இன்று வியாழக்கிழமை (19.02.2026) இடம்பெற்றன. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ அநுர கருணாதிலக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் கௌரவ பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ்.மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து […]
