விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுத் தொகைகளை அதிகரிக்கும் வகையில் உடனடி மீளாய்வு செய்ய வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை.
தேசிய மட்டத்தில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தயாராகும் வகையில் மாகாண விளையாட்டு நிகழ்வுகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அத்துடன், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுத் தொகைகளை அதிகரிக்கும் வகையில் உடனடியாக மீளாய்வு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீர, வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர், வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை இன்று செவ்வாய்க்கிழமை (17.02.2026) காலை ஆளுநர் […]
