January 28, 2026

“காலநிலைச் சவால்களை வென்று நிலைபேறான விவசாயத்தை நோக்கி!” – ஒட்டுசுட்டான் விவசாயக் கண்காட்சியை ஆளுநர் பார்வையிட்டார்

வடக்கு மாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில், ஒட்டுசுட்டான் விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விவசாயக் கண்காட்சியை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) மாலை நேரில் சென்று பார்வையிட்டார். ‘காலநிலைச் சவால்களை எதிர்கொண்டு நிலைபேறான விவசாயத்தை நோக்கி’ எனும் காலத்துக்கு ஏற்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சி, நேற்று (26.01.2026) திங்கட்கிழமை ஆரம்பமாகி, இன்றுடன் நிறைவுபெற்றது. கண்காட்சியைப் பார்வையிட்ட ஆளுநருக்கு, […]

“காலநிலைச் சவால்களை வென்று நிலைபேறான விவசாயத்தை நோக்கி!” – ஒட்டுசுட்டான் விவசாயக் கண்காட்சியை ஆளுநர் பார்வையிட்டார் Read More »

2026ஆம் ஆண்டு வடக்கை பொறுத்தவரையில் ஒரு ‘அபிவிருத்தி ஆண்டாக’ அமையவுள்ளது. – முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்

டித்வா புயல் இடர்பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டு, பிரதேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்கியுள்ளதுடன், அப்பணிகளை மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணைத்தலைவராக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்:

2026ஆம் ஆண்டு வடக்கை பொறுத்தவரையில் ஒரு ‘அபிவிருத்தி ஆண்டாக’ அமையவுள்ளது. – முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார் Read More »

மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டன

வடக்கு மாகாணத்துக்கு ஏனைய மாகாணங்களிலிருந்தே சுகாதாரத் துறைக்கான உத்தியோகத்தர்கள் வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை நாம் முறையாகப் பூர்த்தி செய்து கொடுக்கும்போதே, அவர்களிடமிருந்து எமது மக்களுக்கான முழுமையான சேவையை பெற்றுக்கொடுக்க முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (27.01.2026) மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விடுதிகளைத் திறந்து வைத்து உரையாற்றும்

மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டன Read More »