இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 77ஆவது குடியரசு தின விசேட கலாசாரப் பெருவிழா நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், இந்தியாவின் 77ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலாசாரப் பெருவிழா, இன்று திங்கட்கிழமை (26.01.2026) மாலை யாழ்ப்பாணம், திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விசேட அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த மாலை நேர நிகழ்வில், கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான வண்ணமயமான […]
