மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய மையப் புள்ளியாகத் திகழும் மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மாங்குளம் பேருந்து நிலைய அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையால், தயாரிக்கப்பட்ட திட்டவரைவு பற்றி ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2026) மாலை நடைபெற்றது. மாங்குளம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் என்பன […]
