January 22, 2026

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றது. – கௌரவ ஆளுநர்

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் வீபே டி போர் (Wiebe de Boer) அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வச் சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை […]

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முதலீட்டுக்கான மிகச் சாதகமான சூழல் நிலவுகின்றது. – கௌரவ ஆளுநர் Read More »

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலைய பிரதம பிரதிநிதிக்கும், வடக்கு ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் (JICA) தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். இலங்கையிலுள்ள ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் பிரதம பிரதிநிதி (Country Director) கென்ஜி குரோனுமாவுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு, ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை (21.01.2026) மாலை நடைபெற்றது. இச்சந்திப்பின்போது, ஜெய்க்கா நிறுவனம் கடந்த காலங்களில்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலைய பிரதம பிரதிநிதிக்கும், வடக்கு ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது Read More »

“40 வருடங்களின் பின் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு மீண்டும் உயிர்; புலம்பெயர் உறவுகள் முதலீடு செய்ய முன்வர வேண்டும்!” – அடிக்கல் நடுகை விழாவில் ஆளுநர் அழைப்பு

அரச – தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை முழுமையாக இயக்கப்படவுள்ளதால், புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இவ்வாறான நிலையான உற்பத்திகளில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். இது உங்களுக்கான மிகச் சிறந்ததொரு வாய்ப்பாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்தார். போர்ச் சூழல் காரணமாக 1985ஆம் ஆண்டு மூடப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, அரசாங்கத்தால் முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

“40 வருடங்களின் பின் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு மீண்டும் உயிர்; புலம்பெயர் உறவுகள் முதலீடு செய்ய முன்வர வேண்டும்!” – அடிக்கல் நடுகை விழாவில் ஆளுநர் அழைப்பு Read More »

“முதலீட்டாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய வரலாறு முடிகிறது; வடக்கில் முதலீட்டுக்கு உகந்த பொற்காலம் ஆரம்பம்!” – உச்சிமாநாட்டில் ஆளுநர் பிரகடனம்

கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் முதலீடுகளைச் செய்ய வந்தவர்கள், சாதகமற்ற சூழல் காரணமாகத் திரும்பிச் சென்றதே வரலாறாக இருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் உருவாகியிருக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ நடைபெறுகின்றமை மிகப் பொருத்தமானது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தேசிய மொத்த உற்பத்திக்கான வடக்கின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண வரலாற்றில்

“முதலீட்டாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய வரலாறு முடிகிறது; வடக்கில் முதலீட்டுக்கு உகந்த பொற்காலம் ஆரம்பம்!” – உச்சிமாநாட்டில் ஆளுநர் பிரகடனம் Read More »