January 16, 2026

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: வட, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2,500 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் ஆரம்பம்! – சாவகச்சேரியில் ஜனாதிபதி அங்குரார்ப்பணம்

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (16.01.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் […]

‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’: வட, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2,500 குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் ஆரம்பம்! – சாவகச்சேரியில் ஜனாதிபதி அங்குரார்ப்பணம் Read More »

எமது கலாசாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்ட ஜனாதிபதியின் வருகை உந்துசக்தியாக அமையும்!” – மானிப்பாய் ‘பொங்கல் சங்கமம்’ நிகழ்வில் ஆளுநர் பெருமிதம்

எமது தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் தைப்பொங்கல் பண்டிகையில், நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நேரில் கலந்து கொள்வதானது, எமது கலாசாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்டுவதோடு, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய அம்சமாகவே அமைகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு மற்றும் வடக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணியகத்தின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘பொங்கல் சங்கமம் – 2026’ நிகழ்வு, இன்று (15.01.2026) வியாழக்கிழமை

எமது கலாசாரப் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்ட ஜனாதிபதியின் வருகை உந்துசக்தியாக அமையும்!” – மானிப்பாய் ‘பொங்கல் சங்கமம்’ நிகழ்வில் ஆளுநர் பெருமிதம் Read More »

தை பிறந்தால் வழி பிறக்கும்; ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்!” – வேலணை பொங்கல் விழாவில் ஆளுநர் பெருமிதம்

எமது மக்கள் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். பெரும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கின்றார்கள். ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது எமது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த அடிப்படையில், எமது மக்களின் எதிர்பார்ப்புகளும் இக்காலப்பகுதியில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் நிச்சயம் நிறைவேற்றப்படும் என நான் முழுமையாக நம்புகின்றேன் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில், தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்ட

தை பிறந்தால் வழி பிறக்கும்; ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்!” – வேலணை பொங்கல் விழாவில் ஆளுநர் பெருமிதம் Read More »

மன்னாரில் 50 மெகாவாட் ‘ காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் ‘ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனத்தின்’ (HayWind One) காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று வியாழக்கிழமை (15.01.2026) மன்னார் கொன்னயன் குடியிருப்பில் நடைபெற்றது. ஹேலிஸ் பென்டன்ஸ் (Hayleys Fentons) மற்றும் ஹேலிஸ் (The World of Hayleys) குழுமத்தின் அங்கமான ஹேவிண்ட் வன் லிமிட்டெட் நிறுவனம், இலங்கை மின்சார சபையுடன் இணைந்து இந்தத்

மன்னாரில் 50 மெகாவாட் ‘ காற்றாலை மின் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றது. Read More »

ஜனாதிபதியின் அர்ப்பணிப்புடன் போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் கைகோர்ப்போம்!” – யாழ்ப்பாணத்தில் ஆளுநர் அழைப்பு

மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஆதரவுடன், உயிர்கொல்லி போதைப்பொருளை ஒழிப்பதற்கான நடவடிக்கையை அனைவரும் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுப்போம் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார். விஷ போதைப்பொருட்களை முழுமையாக ஒழிப்பதற்கான ‘முழுநாடுமே ஒன்றாக’ எனும் தேசிய செயற்பாடு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாவட்டச் செயற்பாட்டுக் குழுவை உருவாக்குவதுக்கான யாழ்ப்பாண மாவட்டக் கலந்துரையாடல், யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று புதன் கிழமை (14.01.2026) மாலை நடைபெற்றது. யாழ்.

ஜனாதிபதியின் அர்ப்பணிப்புடன் போதைப்பொருளை ஒழிக்க அனைவரும் கைகோர்ப்போம்!” – யாழ்ப்பாணத்தில் ஆளுநர் அழைப்பு Read More »