வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக எஸ்.விமலேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை (14.01.2026) வழங்கினார். இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் பங்கேற்றார். 19.01.2026 இலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் அவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம் Read More »
