January 4, 2026

“வடக்கு மாகாண மூலிகைகளை ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்!” – நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்திலிருந்து சுதேச வைத்தியத்துறைக்குத் தேவையான மருத்துவ மூலிகைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அவை எமது மாகாணத்தின் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையை அடைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சில் இன்று சனிக்கிழமை (03.01.2026) மதியம் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் […]

“வடக்கு மாகாண மூலிகைகளை ஏற்றுமதி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும்!” – நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் வலியுறுத்தல் Read More »

“வடக்கு மாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள்: இம்மாத இறுதியில் சாத்தியவள அறிக்கை கையளிப்பு!” – ஆளுநர் தலைமையில் ஆராய்வு

வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மிகப் பெரிய முதலீட்டு வலயங்கள் மற்றும் அவற்றில் எதிர்பார்க்கப்படும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று சனிக்கிழமை (03.01.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இம்முதலீட்டு வலயங்கள் தொடர்பான விரிவான சாத்தியவள ஆய்வு அறிக்கையானது, இம்மாத இறுதிக்குள் இலங்கை முதலீட்டுச் சபைக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

“வடக்கு மாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள்: இம்மாத இறுதியில் சாத்தியவள அறிக்கை கையளிப்பு!” – ஆளுநர் தலைமையில் ஆராய்வு Read More »

“நுண்நிதிக் கடன் பொறியில் இருந்து மக்களைப் பாதுகாக்க கூட்டுறவுத் துறை பலப்படுத்தப்படும்!” – கிளிநொச்சியில் ஆளுநர் உறுதி*

வடக்கு மாகாணத்திலுள்ள சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துவது தொடர்பிலும், நுண்நிதிக் கடன் தாக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02.01.2026) நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இச்சந்திப்பின்போது, சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்கள் தற்போதைய பொருளாதாரச் சூழலில் எதிர்கொள்ளும் சவால்கள்

“நுண்நிதிக் கடன் பொறியில் இருந்து மக்களைப் பாதுகாக்க கூட்டுறவுத் துறை பலப்படுத்தப்படும்!” – கிளிநொச்சியில் ஆளுநர் உறுதி* Read More »

“பல்கலைக்கழகத்தின் துணையுடன் வடக்கின் விவசாயத்துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம்!” – கிளிநொச்சி விவசாய பீடக் கலந்துரையாடலில் ஆளுநர் அழைப்பு

வடக்கு மாகாணத்தில் நிலைத்து நிற்கக்கூடிய விவசாய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், அத்துறையின் மேம்பாட்டுக்கும் பல்கலைக்கழகங்கள் எமது திணைக்களங்களுக்குத் தோள் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறான கூட்டு முயற்சியின் ஊடாக, எதிர்காலத்தில் எமது மாகாணத்தின் விவசாயத் துறையில் சிறப்பானதொரு வளர்ச்சியை எட்ட முடியும் என நான் உறுதியாக நம்புகின்றேன் என்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள விவசாய பீடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (02.01.2025), பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தலைமையில் நடைபெற்ற

“பல்கலைக்கழகத்தின் துணையுடன் வடக்கின் விவசாயத்துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம்!” – கிளிநொச்சி விவசாய பீடக் கலந்துரையாடலில் ஆளுநர் அழைப்பு Read More »

“கல்லாறு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை!” – கிளிநொச்சியில் அமைச்சர் மற்றும் ஆளுநர் உறுதி

கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், அப்பகுதி மக்களின் அடிப்படை உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோர் உறுதியளித்தனர். ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் கீழான நடமாடும் சேவையானது, கல்லாறு

“கல்லாறு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உடனடி நடவடிக்கை!” – கிளிநொச்சியில் அமைச்சர் மற்றும் ஆளுநர் உறுதி Read More »